அதானி குழுமம் இந்திய நீர் மூழ்கிக் கப்பல் ரூ.45,000 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இதற்கான முயற்சியாக கடைசி நேரத்தில் தனது அறிக்கையை சமர்பித்துள்ளதாகவும், இதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோடீஸ்வரரான கவுதம் அதானி கடைசி நேர நிமிடத்தில் இந்த பாதுகாப்பு திட்டத்திற்கான முயற்சியில், பங்கேற்க எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி என்றும் கூறியுள்ளார்.

இன்னும் இறுதி இது செய்யப்படாத அசல் இறுதி உற்பத்தியாளருடன் இணைந்து, ஆறு நீர்முழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கு, இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று, கடந்த ஜூன் மாதத்திலேயே மோடி தலைமையிலான அரசு கூறியிருந்தது.

ஏற்கனவே 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் கொள் முதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு ஏலம் எடுக்க தனியார் நிறுவனங்கள் தற்போது அழைக்கப்பட்டுள்ளன. இது இரண்டாவது பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முன்னணி போட்டியாளர்களான லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் நாவல் அன்ட் இன்ஜினியரிங் ஆகியவற்றிற்கு இடையே இது ஒரு நெருக்கடியான போட்டியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கு கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறும்போது, இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இது இதுவரை செயலில் உள்ள கப்பல் கட்டடத்தை சொந்தமாகக் கொண்டிருக்காத ஒரு நிறுவனம், ஏலத்தில் பங்கேற்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஏலம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் பாதுகாப்பு அமைச்சகம், தகுதி வாய்ந்த இந்திய போட்டியாளர்களை பட்டியிடுவதற்காக ஏலத்தினை ஆராயும் என்றும், கப்பல் கட்டும் தளத்தில் அதன் நிபுணத்துவம் மற்றும் அதன் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் பட்டியிலிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இதற்கு முன்னரே ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய வெளிநாட்டு பங்காளிகளும் ஏற்கனவே தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கான முறையான டெண்டர் ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications