தேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு?

மும்பை : பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவுடன், விஜயா பேங்க், தேனா பேங்க் என மூன்று வங்கிகளும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தேனா பேங்கின் தலைமை அலுவலகமான மும்பையிலுள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள அதன் முன்னாள் தலைமை அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான ஏலத்திற்காக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.

தேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு?

மேலும் இதற்கான ஏலம் வரும் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என்றும், இந்த அலுவலகம் குறைந்த பட்சம் 530 கோடி ரூபாய் இருப்பு தொகையாக வைத்துள்ளதாகவும் இவ்வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேனா பேங்கின் அசையா சொத்தாகக் கருதப்படும், இந்த அலுவலகத்தை இ- ஏலம் மூலம், தேனா கார்பரேட் செண்டர் என்ற பெயரில் ஏலம் விட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அசையா சொத்தின் மொத்த பரப்பு 2,878.36 சதர மீட்டார் என்றும், பில்டப் ஏரியா 9,953.73 சதுர மீட்டர் என்றும், இந்த சொத்துகான இருப்பு விலை 530 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்தில் எந்தவித இடையூறும் இல்லை என்றும், எனினும் ஏலம் எடுப்பவர் இதனை தங்களது சொந்த சுயதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு இந்த மூன்று வங்கிகளை இணைக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1 முதலே, இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த கட்டுப்பாடுகளின் படி, விஜயா வங்கி மட்டுமே, கடந்த 2017 - 2018ல் லாபத்தை அறிவித்தது. எனினும் மற்ற இரு வங்கிகளும் நஷ்டத்தையே கண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் செய்தி நிறுவனமான பி.டி.ஐ கடந்த 19 அன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் படி, நாடு முழுவதும் 800 - 900 கிளைகளை சீரமைப்பதற்காக பரிசீலித்து வருவதாகவும், தற்போது ஒரு சீரான ஆய்வுக்கு பிறகு 800- 900 கிளைகளை கண்டறிந்துள்ளது என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த கடன் வழங்குனர் சில இடங்களில் உள்ள கிளைகளை வேறு இடங்களுக்கு மாற்றலாம் என்றும், அல்லது சில கிளைகளை மூடலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே தேனா பேங்கின் தலைமை அலுவலகத்தை, தற்போது விற்பனை செய்ய இவ்வங்கி முடிவு செய்திருப்பதாகாவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+