மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வரும் செப்டம்பர் 16, 2019 திங்கட்கிழமை அன்று ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் கலந்து பேச இருக்கிறர். இந்த திங்கட்கிழமை கூட்டத்தில் ஸ்மார்டோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தான் நோகமாம்.
அதோடு எதிர்காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உற்பத்தியை அதிகரித்து, இந்தியாவை ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதி ஹப்பாக மாற்றுவது எப்படி எனவும் விவாதித்து ஒரு திட்டத்தைத் தயார் செய்ய இருக்கிறார்களாம்.

இந்த கூட்டத்தில் உலகின் பல நாடுகளில் இருந்தும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கு பெற இருக்கிறார்களாம். இந்த 50 நிறுவனங்களில் உலகின் டாப் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், சியாமி, ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.
இப்படி முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் தவிர, பெரிய பெரிய ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் விற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் ஃப்ளெக்ஸ் (Flex) போன்ற ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்களும் இந்த கூட்டத்தில் பங்கெடுக்கப் போகிறார்களாம்.
ஏற்கனவே உலக ஸ்மார்ட்ஃபோன் சந்தைகளில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கும் சீனாவின் சியாமி, ஒப்போ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் நிறைய முதலீடுகளைச் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சியாமி நிறுவனம் இப்போது இந்தியாவில் 7 உற்பத்தி ஆலைகளைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல விவோ நிறுவனமும் சுமார் 7,500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய காத்துக் கொண்டு இருக்கிறது. விவோவின் இந்த முதலீட்டால் இந்திய சந்தைக்கு மட்டும் இல்லாமல், உலக சந்தைக்கே இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் ஒன் ப்ளஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூடத்தை அமைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்த முதலீடுகளை இன்னும் பல மடங்கு அதிகரிக்க காத்துக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications