8 நாட்களில் ரூ.487 கோடி மதிப்பிலான மதுபானம் விற்பனை.. விற்பனை அமோகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொச்சின் : வழக்கமாக நம்மூரில் பொங்கல், தீபாவளி என்றால் மதுவிற்பனை களைகட்டும். அதைபோலவே கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 3ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான கடந்த செப்டம்பர் 10ம் தேதி வரை 8 நாட்களில் மொத்த விற்பனை ரூ.487 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் ஓணத்திற்கு முந்தைய நாளான செப்டம்பர் 10 அன்று மட்டும் 90.32 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 நாட்களில் ரூ.487 கோடி மதிப்பிலான மதுபானம் விற்பனை.. விற்பனை அமோகம்!

பொதுவாகவே கேரளா மக்களால் அதிகம் விரும்பும் மதுபானங்களான, இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபானங்களான விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஒயின் போன்றவை அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் விற்கப்படுகிறது.

அதிலும் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை தினங்களில் விற்பனை களை கட்டியுள்ளது. இதே கடந்த ஆண்டு விற்பனை 457 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக நடப்பாண்டில் முந்தைய ஆண்டை விட 30 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.

மதுபானங்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. வழக்கமாக வார இறுதி நாட்களில் இங்கு மதுபான விற்பனை களைகட்டும் என்றாலும், பண்டிகை காலங்களில் சொல்லவா வேண்டும்.

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம், அந்த மாநிலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முக்கிய பண்டிகை நாட்களிலும் மதுபான விற்பனை அமோகமாக நடக்கும் என்றாலும், குறிப்பாக ஓணம் பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை தொடங்கிய நாள் முதலே மதுபான விற்பனை களைகட்டியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் 3ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான செப்டம்பர் 10ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.

அதிலும் பண்டிகைக்கு முந்தைய நாள் மட்டும் 90.30 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், அதிலும் திருச்சூர் மாநில இரிஞ்சாலகுடாவில் உள்ள கடையில் மட்டும் 1.22 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: kerala liquor
English summary

Kerala alcohol worth Rs.487 crore was sold in just 8 days for onam festival

Kerala alcohol worth Rs.487 crore was sold in just 8 days for onam festival. But, Last year in the same period, liquor sales worth Rs 457 crores.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X