தீபாவளிக்கு களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.. சோகத்தில் சியோமி..!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் பல கலாச்சாரம், பழக்க வழக்கம் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த நாடும் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பண்டிகை தீபாவளி. இந்தத் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் அனைத்து வர்த்தகப் பிரிவுகளும் அதிகளவிலான தள்ளுபடி கொடுத்துப் பொருட்களை வாங்குவது வழக்கம்.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி பிராண்டுகள் தனது புதிய தயாரிப்புகளைத் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்து மக்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் டிவி விற்பனையில் சியோமிக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான டிவியை இந்தத் தீபாவளிக்கு அமேசானில் விற்பனைக்காக அறிமுகம் செய்ய உள்ளது.

அமேசான்

அமேசான்

இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் தீபாவளி விற்பனைக்குத் தயாராகி வருவது போல் நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானும் தனது அதிரடி தள்ளுபடி விற்பனையான Great Indian Festival-க்கு தயாராகி வருகிறது. இந்த விற்பனை எப்போது துவங்கும் என அமேசான் அதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும் அமேசான் இந்த முறை எந்தெந்த பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது என்பதை Great Indian Festival விற்பனை பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

 

ஒன்பிளஸ் டிவி

ஒன்பிளஸ் டிவி

பல ஆயிரம் பிராண்டுகளுடன் இணைந்து விற்பனை செய்தாலும், முக்கியமான மற்றும் பிரபலமான பிராண்டுகளை முன்னிறுத்தி விற்பனையைத் துவங்கியுள்ளது அமேசான்.

இதன் படி அமேசான் 3வது முக்கியப் பிராண்டாக ஒன்பிளஸ் டிவி-யை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் தீபாவளிக்கு ஒன்பிள்ஸ் டிவி இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

 

ஒன்பிளஸ் சிஇஓ

ஒன்பிளஸ் சிஇஓ

கடந்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் சிஇஓ பீட் லாவ் ஒன்பிள்ஸ்டிவி-யின் பின்புற டிசைன்-ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட நிலையில், இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ஒன்பிள்ஸ் டிவி தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்கு வர உள்ளது.

 

முக்கிய விபரம்

முக்கிய விபரம்

இந்த டிவி 55 இன்ச் முதல் 77 இன்ச் வரையில் ஒன்பிளஸ் கொடுக்க உள்ளது. மேலும் இது 4K QLED டிஸ்பிளே கொண்டு உள்ளதால் காட்சியின் தரம் அருமையாக இருக்கும், இதோடு இந்த டிவியில் டால்பி விஷன் சவுண்டு சிஸ்டம் உள்ளதால் சத்தமும் உயர் தரத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது.

இதன் விலை இன்னும் வெளியிடவில்லை.

 

சியோமி

சியோமி

ஒன்பிளஸ் டிவியின் அறிமுகம் இப்பிரிவில் கொடிகட்டிப் பறக்கத் துவங்கியிருக்கும் சியோமிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. சமீப காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனம் டிவி, போன் என அனைத்திற்கும் விலை குறைத்துள்ளதால் கிட்டத்தட்ட அனைத்தும் ஓரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தரம் என்பது முக்கியமாகக் காரணியாக மக்கள் தற்போது பார்க்க துவங்கியுள்ளனர். இதன் படி பார்த்தால் சியோமியின் தரம் சற்று குறைவாக உள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தரம் சிறப்பாக இருக்கும் நிலையில் டிவியும் அந்த நம்பிக்கையை இழக்கும் வகையில் ரிஸ்க் எடுக்க வாய்ப்பு இல்லை. தரமும் விலையும் மக்களுக்குப் பிடித்துவிட்டால் சியோமி டிவி விற்பனை கோவிந்தா தான்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+