இந்தியாவில் பொருளாதாரச் சரிவு, வர்த்தகச் சரிவு, வேலைவாய்ப்புப் பிரச்சனை, அன்னிய முதலீடு வெளியேற்றம் எனத் தொடர்ந்து பல பிரச்சனைகள் இருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போவது என்ற தெரியமால் மோடி அரசு குழப்பத்தில் இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
நாட்டில் வர்த்தகம் குறைந்து பல துறைகளில் உற்பத்தி அளவுகள் குறைந்துள்ளது எல்லோருக்கும் தெரியும், இதன் எதிரொலியாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி அளவும் தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஏற்றுமதி
தொடர்ந்து 2வது மாதமாக இந்தியாவில் ஏற்றுமதி அளவுகள் குறைந்து வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரத் தேக்கத்தின் காரணமாக மக்களின் தேவை குறைந்துள்ளது போல, சர்வதேச சந்தையில் அமெரிக்கா - சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் பெரும் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.
காரணம்
இந்தியாவில் ஏற்றுமதி அளவுகள் பாதிக்கப்பட்டதற்கும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்ததகப் போர் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வர்த்தகப் போரின் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
6.05 சதவீதம் சரிவு
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் ஏற்றுமதி அளவுகள் குறைந்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் பெரும் சரிவை சந்தித்தது, அதன்பின் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி அளவு 6.05 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
13.45 பில்லியன் டாலர்
இதேபோல் இறக்குமதி அளவும் 13.45 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 13.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சீனா
இந்தியாவைப் போல் சீனாவில் ஏற்றுமதி அளவு 1 சதவீதம் குறைந்துள்ளது, இறக்குமதி அளவு 5.6 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்கா உடனான மாபெரும் வர்த்தகப் போரையும் தாண்டி சீனா வெறும் 1 சதவீத ஏற்றுமதி தான் பாதிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்
நாட்டின் ஆகஸ்ட் மாத 13.45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் இக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகளவில் செய்யப்பட்ட தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் முக்கியக் காரணியாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 10-11 பில்லியன் டாலர் வரையில் குறையும் எனவும் ICRA நிறுவன ஆய்வுகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications