1. வரும் விஜய தசமியில் இருந்து வருமான வரித் துறையினரிடம் இருந்து வெறும் நோட்டீச்கள் அனைத்தும், இ நோட்டீஸ் ஆகத் தான் வரும். எனவே இனி கூடுமான வரை மனிதர்களிடம் நேரிட்டுப் பேசி தங்கள் வருமான வரி சார் விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஏற்றுமதி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்
2. சின்ன சின்ன வருமான வரி சார் பிரச்னைகள் மற்றும் தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. எந்த தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வருமான வரித் துறையின் உயர் அதிகாரிகள் குழு முடிவு செய்யும். இதுவும் ஏற்றுமதி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்

3.Interest Equalisation Scheme வழியாக ஏற்றுமதியாளர்களுக்கு கொடுக்கும் கடனுக்கு 5 % வட்டி தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். பொதுவாக ஒரு நபருக்கு ஏற்றுமதி சார்ந்த ஆர்டர்கள் கிடைத்துவிட்டால் அந்த ஆர்டரைக் காட்டி வங்கிகளில் கடன் பெறலாம். அப்படி வாங்கும் கடனுக்கு 5 % தள்ளுபடி கொடுப்பது தான் இந்த Interest Equalisation Scheme.
4. முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்பட்டு ரீ ஃபண்ட் தொகைகளை விரைவாக வழங்கும் ஜிஎஸ்டி சிஸ்டம் இந்த மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும். எனவே விரைவில் ஏற்றுமதியாளர்கள் கையில் ஜிஎஸ்டி வரியாகச் செலுத்திய காசு கிடைக்கும்.
5.Remission of Duties or Taxes on Export Products (RoDTEP) என்கிற புதிய திட்டத்தின் படி தான் வரும் ஜனவரி 01, 2020 முதல் ஏற்றுமதி செய்யலாம். சுருக்கமாக இதுவரை ஏற்றுமதி செய்ய கூடுதல் வரி செலுத்த வேண்டிய பொருட்களுக்கு இனி வரி செலுத்தாமல் ஏற்றுமதி செய்யும் வகையில் அமையும். இதனால் மட்டும் அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பாம்.
6. Export Credit Guarantee Corporation அமைப்பு வழியாக ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இனி அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கப்பட இருக்கிறதாம்.
7. துபாய் போல பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டி ஏற்றுமதியை அதிகரிப்பது. குறிப்பாக ஆண்டுக்கும் ஒரு முறை இந்த ஏற்றுமதிக்கான ஷாப்பிங் திருவிழாவை நடத்த இருப்பது.
8. ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்களில் இருக்கும் சலுகைகளை விளக்க வணிக அமைச்சகம், ஏற்றுமதி அமைப்பான FIEO - Federation of Import and Export Oganization உடன் சேர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கும் அந்த சலுகைகளைச் சொல்லி வழிகாட்டுவது.
9. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்த பல டெக்னிக்கல் ஸ்டாண்டர்ட்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அப்போது தான் பொருளின் தரம், அதன் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர் கொள்வது, தரக் குறைவான இறக்குமதிகளை எதிர்கொள்வது எல்லாம் செய்ய முடியும் எனச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications