1. 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இதுவரை வாரா கடன் பட்டியலி இல்லாத மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் செல்லாத, 60% கட்டி முடிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவு செய்ய இருக்கிறார்களாம். இது குடியிருப்பு வீடுகள் திட்டத்துக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இதனால் சுமார் 8.5 லட்சம் முதல் 14 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். வீடு வாங்க இருப்பவர்களும் பயன்பெறுவார்கள் எனச் சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

3. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்தி இருக்கிறது. இதனால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் எளிதில் வாங்க முடியுமாம்.
4. அரசு ஊழியர்கள் அதிக பேர் வீடுகளை வாங்க, அரசு கொடுக்கும் அட்வான்ஸ் பணத்துக்கான வட்டி, இந்திய அரசின் 10 ஆண்டு கால கடன் பத்திரத்தின் (ஜி செக் கடன் பத்திரங்கள்) வட்டி விகிதத்துடன் இணைத்து இருக்கிறார்களாம். இதனால் நிறைய அரசு ஊழியர்கள் வீடு வாங்க முன் வருவார்களாம்.
5. ஜூலை 05, 2019 பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பே வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு 1.5 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம் என இருந்தது. ஜூலை 05-ல் பட்ஜெட்டில், மலிவு விலை வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் (மொத்தம் 3 லட்சம் ரூபாய்) வட்டிக்கு வரிக் கழிவு பெறலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 3 லட்சம் ரூபாய் வட்டியை வரிக் கழிவாக வரும் 31 மார்ச் 2020-க்குள் 45 லட்சம் ரூபாய்க்குள், மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. அதோடு சமீப காலமாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை ஆர்பிஐ-ன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்துடன் இணைத்து சாதாரண மக்கள் செலுத்தும் இ எம் ஐ தொகையை குறைத்ததும் கவனிக்கத்தக்கது.
7. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் 2022-க்குள் 1.95 வீடுகளைக் கட்ட அரசு முனைப்போடு செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications