இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த, இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவிகிதமாக வந்தது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
மத்திய ரிசர்வ் வங்கியோ, 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 %-ஆக இருக்கும் எனக் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ கணித்ததை விட மிக மிகக் குறைவான வளர்ச்சி கண்டிருப்பதால், ஜிடிபி கணக்கிடுவதில் ஆர்பிஐ எதை தவற விட்டது, என்ன தவறு நடந்து இருக்கிறது எனக் கண்டு பிடிக்க, ஜிடிபி கணக்கீடுகளை மறு பரிசீலனை செய்து வருகிறார்களாம்.

அதோடு முன்பை விட மத்திய ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சியை இன்னும் உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். இந்தியாவின் பணவீக்கம் சார்ந்த கணக்கீடுகளில் ஆர்பிஐ கிட்டத் தட்ட சரியாக கணக்கிட்டு இருக்கிறது. அதே போல இந்தியாவின் ஜிடிபி தரவுகளையும் மிகச் சரியாக கணக்கிட விரும்புகிறோம் எனவும் சொல்லி இருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
வழக்கம் போல பத்திரிகையாளர்கள், எப்போது இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும், எப்போது நிலைமை சீர் அடையும் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சக்தி காந்த தாஸ் ஒரு சரியான காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாறாக இந்தியாவின், 2019 - 20 நிதி ஆண்டின், இரண்டாவது காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் வெளியாக வேண்டும். அப்போது தான் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருக்குமா..? எனச் சொல்ல முடியும் என்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
கடந்த பிப்ரவரி 2019 கால கட்டத்திலேயே இந்தியாவில் பொருளாதார மந்த நிலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உணர்ந்து தான், வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியதைச் சுட்டிக் காட்டி ஆர்பிஐ, தன்னால் முடிந்த வரை இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications