இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன.. இன்னும் சரியுமா?

சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலையும், எண்ணெய் வயலும், கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும், 71.54 ரூபாயாக சரிந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 70.90 ரூபாயாக ஆக முடிவடைந்த நிலையில், தற்போது 71.54 ஆக வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன.. இன்னும் சரியுமா?

இந்தியா எரிபொருளுக்கான தேவை அதிகளவிலான இறக்குமதியையே நம்பி உள்ளது. அதிலும் அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி சவுதியில் இருந்து இறக்குமதி செய்து கொண்டுள்ள நிலையில், சவுதியில் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் எண்ணெய் விலை அதிகரிக்கும், இதன் மூலம் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்பதால், இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

இன்று மட்டும் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது. இந்த அதிகப்படியான ஏற்றம், கடந்த 1991லிருந்து நடந்து வந்த போரிலிருந்து இன்று தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் 5 சதவிகித எண்ணெய் சப்ளை செய்யும் அளவுள்ள, இந்த ஆலை தாக்கப்பட்டதையடுத்து, இன்று மட்டும் பேரலுக்கு 10 டாலர் அதிகரித்துள்ளது. இது மேலும் இந்தியாவின் மாத வர்த்தக பற்றாக்குறையை 1.5 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு மோசமாக்குகிறது.

மேலும் இது நுகர்வோர் விலை பணவீக்கமும் 0.3 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகப்படியான நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூபாயின் மதிப்பை மேலும் சரிவுக்கு தள்ளியது என்றே கூறலாம். மேலும் சென்செக்ஸ் இன்று காலையில் 200 புள்ளிகள் வீழ்ச்சியுடனும் காணப்பட்டது.

சவுதி அரசு விரைவில் நிலைமை சீரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டாலும், தற்போது உயர்ந்துள்ள விலையும், மேலும் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ள காலமும், குறிப்பிடப்பட்ட இந்த இடைப்பட்ட இடைவெளி மிக முக்கியமானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் மத்திய ஐ.எஃப்.ஏ மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் தொடர்ந்து பதற்றங்களே காணப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

இது தவிர இந்த வாரம் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெற இருப்பதால், இங்கு வட்டி குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் மீண்டும் இந்திய சந்தைகள் மீண்டும் சரிவை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, மேலும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க பல சலுகைகளை அறிவித்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி குறைந்துள்ளது என்றும், இதனால் வர்த்தக பற்றாக்குறையும் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+