ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி!

டெல்லி : ஓலா உபெரால் பயணிகள் வாகன விற்பனை குறையலாம், ஆனால் டிரக்குகள் விற்பனை ஏன் குறைந்துள்ளது என்று முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் சென்னையில் மோடி 2.0 அரசின் சாதனைகளை பற்றி சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா உபெரும், ஒரு காரணி என்றும் கூறியிருந்தார்.

மேலும் புதியதாக வாகனங்கள் வாங்கி, அதற்கு அதிகளவிலான செலவுகளை செய்வதற்கு, பதிலாக ஓலா உபெரிலேயே பயணம் செய்து கொள்ளலாம் என்றும், மக்களின் இந்த மனப்போக்கே ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சிக்கு ஓரு காரணி என்றும் கூறியிருந்தார்.

டிரக்குகள் விற்பனை ஏன் சரிந்தது?

டிரக்குகள் விற்பனை ஏன் சரிந்தது?

மக்கள் ஓலா உபெரில் பயணித்ததால் தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்தது எனில், ஓலா உபெரால் கார் விற்பனை சரிந்திருக்கலாம், ஆனால் ஏன் இருசக்கர வாகனம் மற்றும் டிரக்குகள் விற்பனை ஏன் சரிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா. மேலும் அமைச்சர்கள் பலர் வேடிக்கையான கருத்துகளை கூறி வருகின்றனர். இது நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லாது. மாறாக இந்திய அரசின் நன்மதிப்பைத் தான் சீர் குலைக்கும் என்றும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

ஏன் இருசக்கர விற்பனை குறைந்தது?

ஏன் இருசக்கர விற்பனை குறைந்தது?

மக்கள் மொபைல் ஆப்பை அடிப்படையாக கொண்ட கேப்களைத் தானே பயணம் செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏன் இரு சக்கர விற்பனையும், லாரிகள் மற்றும் கனரக வாகன விற்பனையும் குறைய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக இந்த டாக்ஸி நிறுவனங்கள் பயணிகளை ஏற்றி செல்ல கார்களை தானே பயன்படுத்துகின்றன என்றும் கேட்டுள்ளார். கடந்த வாரமே இது குறித்து பல தரப்பில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஒரு முன்னாள் நிதியமைச்சரே இவ்வாறு கேட்டிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்களின் வேடிக்கையான பேச்சு

அமைச்சர்களின் வேடிக்கையான பேச்சு

பீகாரின் நிதியமைச்சர் சுஷில் மோடி, மழைக்காலம் காரணமாக மந்த நிலை நிலவுவதாக கூறியுள்ளார். இதே மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விதி பற்றி பேசுகிறார். ( நியூட்டன் ஈர்ப்பு விதி). மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓலா உபெரால் ஆட்டொமொபைல் துறை வீழ்ச்சியடைந்தது என்றும் கூறியுள்ளார். ஆக இது போன்ற வேடிக்கையான பேச்சுகள் இந்தியாவை நல்வழி பாதைக்கு எடுத்துச் செல்லாது என்றும், இது இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஷாப்பிங் திருவிழாவா?

இந்தியாவில் ஷாப்பிங் திருவிழாவா?

துபாய் நடக்கும் ஷாப்பிங் திருவிழா போல், இந்தியாவிலும் நடத்த போவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் நிதி நிலைமை வேறு, துபாயின் நிதி நிலைமை வேறு, இந்தியாவில் விவசாயிகளின் வளர்ச்சி எட்டப்படும் போது இந்தியா வளர்ச்சி பெறும், எடுத்துக்காட்டாக விவசாயிகள் அதிகம் உள்ள மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் போல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு 6 லட்சம் கோடி இழப்பு?

இந்தியாவுக்கு 6 லட்சம் கோடி இழப்பு?

மேலும் இந்தியாவின் வளர்ச்சி எட்டு சதவிகிதத்தை எட்டியிருக்க வேண்டும். மாறாக கடந்த ஜூன் காலாண்டில் ஜி.டி.பி விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் 3 சதவிகித வளர்ச்சியை காணவில்லை என்றும், இதனால் அரசுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வங்கி இணைப்பு வளர்ச்சியை கொடுத்திடாது?

வங்கி இணைப்பு வளர்ச்சியை கொடுத்திடாது?

வங்கிகள் இணைப்புகளை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த வங்கிகளின் இணைப்பால் வாராக் கடன்களின் மதிப்பு தானாக குறைந்து விடாது. மாறாக இந்த திட்டம் வங்கிகளுக்கு தீங்கினையே விளைவிக்கும், ஏனெனில் வங்கி அதிகாரிகள் வங்கிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வங்கிகளை முழுமையாக இணைப்பதிலேயே கவனத்தை செலுத்துவார்கள் என்றும் சின்ஹா கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+