அதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்!

டெல்லி : ஆன்லைன் ஜாம்பாவானான அமேசான் அடுத்து வரும் பண்டிகை காலத்தை குறித்து வைத்து பல ஆயிரம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, சிறந்த தள்ளுபடியையும் கொடுக்க உள்ளதாகவும், இதனால் விற்பனை கடந்த ஆண்டை விடவும், இந்த ஆண்டில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

மேலும் தனது விற்பனையானது, இந்த பண்டிகை கால சீசனில் 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அமேசான் கூறியுள்ளது.

அதிலும் பண்டிகைக் கால தள்ளுபடி மற்றும் சலுகைகளை வாரி வழங்க உள்ளதாகவும், இந்த சலுகையானது செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை உள்ளதாகவும், இந்த சமயத்தில் லட்சக் கணக்கான புதிய பொருட்களையும், குறிப்பாக 5,000 பர்னிச்சர் பொருட்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

மொத்த இந்த தளத்தில் 200 மில்லியன் பொருட்கள் இந்த தளத்தில் உள்ள அனைத்து வகையான பொருட்களும் உள்ளதாகவும், பொதுவாக முந்தய ஆண்டை விட விற்பனை 1.5 மடங்கு அதிகரிக்கும் என்றும், அதிலும் அமேசான் கடந்த ஆண்டை விட 50 சதவிகிதம் விற்பனை இந்த பண்டிகை சீசனில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அமேசான் இந்தியாவின் தலைவர் சுசித் சுபாஸ் கூறியுள்ளார்.

குறைந்த விலையில் பொருட்கள்

குறைந்த விலையில் பொருட்கள்

நாட்டில் தேவையானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையிலும், மக்கள் இந்த பண்டிகை காலத்தில் குறைந்த விலையில் தரமான பொருட்களை எதிர்பார்க்கின்றனர். ஆக இந்த சீசன் கண்டிப்பாக களைகட்டும் என்றும் சுபாஸ் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக சிறு நகரங்களில் இருந்தும் மற்றும் நகரங்களில் இருந்தும் இந்த முறை வாடிக்கையாளர்களாக அதிகளவில் இருப்பார்கள் என்றும் அமேசான் கூறியுள்ளது.

புதிய பிராண்டுகள் அறிமுகம்

புதிய பிராண்டுகள் அறிமுகம்

அதிலும் குறிப்பாக மொபைல் பிராண்டுகளான சாம்சங், ஜியாக்மி, ஒன்பிளஸ், மற்றும் டிவி உற்பத்தியாளர்களும் தங்களது புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள் என்றும் அமேசான் கூறியுள்ளது. அதிலும் அதிகளவிலான பொருட்கள் அதிக விலையிலிருந்து, குறைந்த விலை வரைக்கும் கிடைக்கும் என்றும், இந்த வகையாக பொருட்கள் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் என்றும், குறிப்பாக தீபாவளி நேரங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அமேசான் கூறியுள்ளது.

பர்னிச்சர் வர்த்தகம் படுஜோரு

பர்னிச்சர் வர்த்தகம் படுஜோரு

தற்போது அமேசான் குறிப்பாக பர்னிச்சர் வர்த்தகத்தில் மேலடைந்து வருவதாகவும், அதிலும் வரும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்கு பர்னிச்சர்கள் வாங்க முற்படுவார்கள் என்றும், இதனால் விற்பனை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் 60,000 வகையான பர்னிச்சர் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.

கை கொடுக்கும் நோ காஸ்ட் இ.எம்.ஐ

கை கொடுக்கும் நோ காஸ்ட் இ.எம்.ஐ

அதிலும் 25 சதவிகிதம் கம்பெனி புராடக்டுகள் நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்சனை உபயோகப்படுத்தி வாங்குகிறார்கள் என்றும், அதிலும் 65 சதவிகித விற்பனையானது நகரங்களில் இருந்து வருவதாகவும், குறிப்பாக நாசிக், ரெய்ப்பூர், வேலூர், உடுப்பி, கொல்லம், பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளது. அதிலும் தற்போது அமேசான் டாப் 10 நகரங்களில் ஆர்டர் செய்த 48 மணி நேரங்களில் டெலிவரி செய்து விடுவதாகவும், இதே 25 டாப் நகரங்களில் 2 - 3 நாட்களில் டெலிவரி கொடுத்து விடுவதாகவும் அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+