ஒரே குடும்பத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று வியக்கும் அளவிற்கு அம்பானி குடும்பம் தற்போது இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் அளவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தம்பி அனில் அம்பானி கையில் இருக்கும் வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து நிறுவனங்களைத் திவாலாக அறிவித்து வருகிறார்.
அனில் அம்பானிக்குத் தற்போது யாரும் உதவி செய்ய முன்வரவும் விருப்பம் இல்லாத சூழ்நிலையில் தொடர்ந்து நிறுவனங்கள் கடன் பிரச்சனையால் திவால் ஆகும் காரணத்தால் கண்ணீர் வடித்து வருகிறார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான மேலும் ஒரு நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட உள்ளது.
திவாலாகும் GCX
கடனில் மூழ்கியிருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான GCX லிமிடெட் நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் சேவையை அளிக்கும் undersea cable system நிறுவனம். இத்துறையில் GCX உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கிளை நிறுவனங்களும் இந்த அறிவிப்பின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது, அதில் GCX நிறுவனமும் முக்கியமான ஒன்று.
350 மில்லியன் டாலர்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதில் பாதிக்கப்பட்ட GCX நிறுவனம் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 350 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவன பத்திர முதலீட்டுகள் 7 சதவீதம் முதிர்வு அடைந்து முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.
இதனால் GCX நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திவாலாக அறிவித்துவிட்டது.
கடன் பிரச்சனை
திரும்பு இடம் எல்லாம் தோல்வி, வர்த்தகம் சரிவு, அரசு அமைப்புகள் நெருக்கடி, முதலீட்டாளர்கள் நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி எனத் திக்குமுக்காடி வருகிறார் அனில் அம்பானி. ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தப் பிரச்சனை இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கி வருகிறது அனில் அம்பானி மட்டும் இல்லை, இவரையும் இவரது குடும்பப் பெயரையும் நம்பி பல லட்சங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் தான்.
சொத்து விற்பனை
இதனிடையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் கடன் பிரச்சனைகளைச் சமாளிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து 3.1 பில்லியன் டாலர் அதாவது 21.7 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக இக்குழுமம் தெரிவித்துள்ளது.
வராக் கடன்
இந்தியா எப்போது இல்லாத அளவிற்குத் தற்போது வராக் கடன் பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு நிறுவனங்களின் கடனுக்கான தீர்வு மற்றும் திவாலாகும் நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது.
இதில் சிக்கிக் கொண்டது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
ரிலையன்ஸ் நேவெல்
சில நாட்களுக்கு முன் அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இக்கடனுக்கான வட்டியும், அசலும் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் எடுக்கப்பட்ட அதே நடவடிக்கையை இந்த நிறுவனத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது.
250 பில்லியன் டாலர்
இந்திய ராணுவ தடவாளங்களை மேம்படுத்தும் 250 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகப் போர் கப்பல் மற்றும் ரோந்து கப்பல்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் 2.2 பில்லியன் டாலர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பயன் இல்லை
ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த கொள்கை மாற்றங்கள் இத்துறை சார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க தவறியதன் விளையாக ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் பெரிய ஆர்டர்கள் எதுவும் பெறவில்லை. இதனால் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் பயன் பெறவில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications