இந்தியாவிற்கு வரும் கோர்மா.. கூகிள் அதிரடி ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகிள் தினமும் புதுப்புது விஷயங்களைத் தேடிக்கொண்டு புதிய சேவைகளையும், தயாரிப்புகளையும் மக்களுக்குக் கொடுத்து வருகிறது. இந்த வகையில் தற்போது கூகிள் புதிதாக ஒரு வேலைவாய்ப்பு தேடுதல் தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இப்புதிய வேலைவாய்ப்புத் தளத்தைச் செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூகிள் தெரிவித்துள்ளது. சரி இந்தச் சேவையால் யாருக்குப் பயன்..?

அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..!

செப்டம்பர் 20
 

செப்டம்பர் 20

சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகிள் நிறுவனம் பல பெரிய திட்டங்களில் ஈடுபட்டு இருந்தாலும், மக்கள் தினமும் பயன்படுத்தும் சேவைகளில் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரிய அளவில் கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாகவே தற்போது புதிய வேலைவாய்ப்பு தளமான கோர்மோ (Kormo) இந்தியாவில் APP வாயிலாக அதாவது செயலி வாயிலாக இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது கூகிள்.

 யாருக்கானது..?

யாருக்கானது..?

இந்தியாவில் ஏற்கனவே நாக்ரி, டைம்ஸ்ஜாப்ஸ் போன்ற பல வேலைவாய்ப்புத் தளங்கள் இருக்கும் நிலையில், கூகிள் எதற்காக..? யாருக்காக இந்தச் சேவையை அறிமுகம் செய்கிறது? என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் உள்ளது.

இத்தளம் அதிகமாக ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கும், கடுமையான கட்டமைப்புகள் தேவைப்படாத நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்புத் தளத்தில் தங்களது கோரிக்கைகளை வைக்கும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகிள்.

 அறிமுகம்

அறிமுகம்

இப்புதிய சேவையை அடுத்தச் சில வாரங்களில் டெல்லியில் நடைபெற உள்ள வருடாந்திர கூகிள் கூட்டத்தில் கோர்மா சேவை பற்றி அறிவித்து முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யக் கூகிள் முடிவு செய்துள்ளது.

 சோதனை
 

சோதனை

கூகிள் இச்சேவையை 2019ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பல துறை வேலைவாய்ப்புகளில் சோதனை செய்து உள்ளது. துவக்க நிலையில் கோர்மா தளத்தில் உயர் பதவி வேலைவாய்ப்புகள் அல்லாமல் துவக்க நிலை வேலைவாய்ப்புகளில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.

இது கூகிளின் Next Billion Users திட்டத்தின் ஒரு பகுதியாகத் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பங்களாதேஷ்

பங்களாதேஷ்

செப்டம்பர் 2018இல் இச்சேவையை முதல் முறையாகப் பங்களாதேஷ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுப் பெரும் வெற்றி அடைந்த காரணத்தால் தற்போது கூகிள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

குறைந்த காலகட்டத்திலேயே கோர்மா தளம் 50000 வேலைவாய்ப்புகள் தேடுபவர்களை இணைத்துள்ளது.

போட்டி

போட்டி

இந்தியாவில் கோர்மா தளத்திற்குக் குவிக்கர்-இன் பாபா ஜாப்ஸ், OLX-இன் ஆசான் ஜாப்ஸ், குவெஸ் கார்ப், டெக் மஹிந்திராவின் Saral Rozgar போன்ற தளத்திற்குப் போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google கூகிள்
English summary

Kormo: Google entering into Indian job search market with bang

Set for the launch on September 20, Google will make its way into the Indian entry level job search market with its app Kormo.Before its introduction in other markets, the curtains were raised on the app in Bangladesh.
Story first published: Tuesday, September 17, 2019, 8:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X