வருமானவரி என்றால் என்ன? ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துவது தான் வருமான வரி. அதையும் அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டும்.
ஆனால் இங்கு அரசியல்வாதிகளுக்கு வருமான வரியைக் கூட அரசாங்கங்களே தான் கட்டிக் கொடுக்கின்றன என்றால் நம்புவீர்களா..? வேறு வழி நம்பித் தான் ஆக வேண்டும்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் வருமான வரிகளை மாநில அரசு கஜானக்கள் தான் கட்டிக் கொடுக்கிறார்களாம்.
ஜாலி தான்
ஆக இந்த ஐந்து மாநிலங்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள், வாங்கும் சம்பளத்துக்கு, வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்தில் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1981 ஆம் ஆண்டு முதல் அனைத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும், உபி அரசு அரசு கருவூலமே வருமான வரி கட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் வெளியானது. இந்த விஷயம் தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்கு சென்ற உடன், இந்த சட்டத்தை திருத்தி அமைப்பதாக சொல்லியிருக்கிறார்.
சட்டம்
அமைச்சர் பெருமக்கள் மற்றும் முதல்வர்களுக்கு அரசு கருவூலங்களை வருமான வரி செலுத்தி கொடுக்கும் அந்த சட்டத்தின் பெயர் UP Ministers' Salaries, Allowances and Miscellaneous Act, 1981. உத்திரப்பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு 1981ஆம் ஆண்டு முதல் இந்த சலுகைகள் என்றால் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் இதில் சீனியர்கள். இந்த அரசியல்வாதிகளுக்கு 1966 ஆம் ஆண்டு முதல் இந்த சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பஞ்சாப்
அவ்வளவு ஏன்..? பஞ்சாப் மாநிலத்தில் கூட கடந்த மார்ச் 2018 வரை முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு, பஞ்சாப் மாநில அரசு கருவூலங்கள் தான், வருமான வரியைச் செலுத்தி வந்தது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங், சமீபத்தில் தான், கிழக்கு பஞ்சாப் அமைச்சர்கள் சம்பள சட்டம் 1947-ஐ நடைமுறைக்குக் கொண்டு வந்து, அரசு கருவூலங்கள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு வருமான வரி செலுத்தும் அவலத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 2018 வரை இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது.
2000 முதல்
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து நவம்பர் 2000 ஆண்டு வாக்கில் தனியாக பிரிந்த உத்தராகண்ட் மாநிலமும், இந்த சலுகை நடைமுறையை பின் பற்றி வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டசபை அவைத் தலைவர் மற்றும் சட்டசபை அவை துணை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பலரும் செலுத்த வேண்டிய வருமான வரியை, மாநில அரசு தன் கஜானாவில் இருந்து செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய உத்தராகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத், இந்த வருமான வரிச் சலுகைச் சட்டத்தை மாற்றி அமைப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications