மும்பை: ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வதாரமாக இருக்கும் ஊதியத்தை குறைத்துள்ளது சோமேட்டோ நிறுவனம்.
குறிப்பாக பெங்களூரு, மும்பையை சேர்ந்த டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கொடுத்த வந்த ஊதியத் தொகை, அதாவது ஒரு ஆர்டருக்கு 40 ரூபாயிலிருந்து, தற்போது 30 ரூபாயாக குறைத்துள்ளது சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம்.

எனினும் இது குறித்து பெங்களூரு மற்றும் மும்பை டெலிவரி செய்யும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தற்போது அவர்களுக்காக டெலிவரி செய்யும் நேரத்தையும் குறைத்துள்ளது இந்த நிறுவனம்.
இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் ஒர் ஆர்டருக்கு ஊதியாகமாக கொடுத்து வந்த 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே அடிப்படை ஊதியமானது வாடிக்கையாளர்களின் திருப்தி, டெலிவரி செய்தலுக்கான டச் பாயிண்ட்ஸ் போன்ற அளவீடுகள் பொறுத்து, இதை நிர்ணயிக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
குறைக்கப்பட்ட டெலிவரி செய்யும் நேரம், கணினி செயல்பாடு உள்ளிட்ட செயல்பாடுகள் எங்களது கூட்டாளர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் அதிக டெலிவரிகளை செய்ய உதவியுள்ளன என்றும் இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த உணவு டெலிவரி நிறுவனமானது கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று 541 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 10 சதவிகிதம் என்றும் கருதப்பட்ட நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், சோமேட்டோ உணவு தளத்தை மேம்படுத்த இந்த நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கையை கையாண்டுள்ளதாகவும், மேலும் எங்கள் பயனர்களின் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு வினியோகம் தொடங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவே ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, எங்களது பயண தூரம் அதிகரிக்கப்பட்டு விட்டது, மேலும் எங்களது போனஸ் புள்ளிகளை வைத்தே ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இது எங்களின் ஊக்கத் தொகையினை பாதிக்கும் என்றும் ஊழியர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த நிறுவனத்தின் கோல்டு திட்டத்தின் மூலம் பெரும் பிரச்சனைக்கு ஆளான இந்த நிறுவனம், பின்னர் தனது சேவை தரத்தினை மேம்படுத்திக் கொள்வதாகவும், கோல்டு திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதாகவும் கூறியது. இந்த நிலையில் முன்னதாக 15 சதவிகித ஆர்டர்களுக்கு ஆதரவு தேவை ஏற்பட்ட நிலையில் தற்போது 7.5 சதவிகித ஆர்டர்களுக்கு மட்டுமே இந்த ஆதரவு தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications