ஸ்மார்ட்ஃபோனுக்கு 40 % தள்ளுபடி..! டிவி-க்கு 75% தள்ளுபடி..! வாங்க சார் வாங்க..!

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆஃபர் (Amazon Great Indian Festival sale) இருப்பதை நாம் அறிவோம்.

வரும் செப்டம்பர் 30, 2019 முதல் அக்டோபர் 04, 2019 வரை இந்த விழாக் கால தள்ளுபடி விற்பனை அமேசான் வலை தளத்தில் நடக்க இருக்கிறது.

அமேசான் ப்ரைம்-ல் பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரும் செப்டம்பர் 28, 2019 மதியம் 12 மணி முதலே இந்த ஆஃபர்கள் கிடைக்கத் தொடங்கி விடுமாம்.

கூடுதல் தள்ளுபடி

கூடுதல் தள்ளுபடி

இந்த விழாக் கால தள்ளுபடி விற்பனையின் போது, எஸ்பிஐ டெபிட் கார்ட் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு, கூடுதலாக 10 % தள்ளுபடி கிடைக்குமாம். அதே போல அமேசான் இணைய தளத்தை பயன்படுத்தி விமான பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்தால், சுமார் 2,500 ரூபாய் வரை கேஷ் பேக் போன்ற சலுகைகளும் கிடைக்குமாம்.

ஸ்மார்ட்ஃபோன்

ஸ்மார்ட்ஃபோன்

இந்த விழா கால விற்பனையில், இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள், சுமார் 40 % தள்ளுபடி விலையில் கிடைக்குமாம். அதோடு சில ரக ஸ்மார்ட்போன்களுக்கு நோ காஸ்ட் இ எம் ஐ, இலவச ஸ்கிரீன் ரீ-ப்ளேஸ்மெண்ட், நல்ல விலைக்கு பழைய போன்களை மாற்றிக் கொடுப்பது, கூடுதல் கேஷ் பேக் என பல சலுகைகளை ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்து இருக்கிறது அமேசான் நிறுவனம்.

15 புதிய மாடல்

15 புதிய மாடல்

இந்த விழாக்கால விற்பனையில் சுமார் 15 புதிய ஸ்மார்ட்போன்கள் புத்தம் புதிதாக, சந்தைக்கு வர இருக்கிறதாம். இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் அணி வகுப்பில், ஒன் பிளஸ் 7 T மற்றும் ஒன் பிளஸ் 7 T ப்ரோ ரக ஸ்மார்ட் போன்கள் சிறப்பாக விற்பனையாகும் என அமேசான் தரப்பில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். பழைய போன்களுக்கு அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்களாம்.

வரலாற்றில் இல்லாத விலை சரிவு

வரலாற்றில் இல்லாத விலை சரிவு

அமேசானின் இந்த விழாக் கால விற்பனையில் சாம்சங், ஒன் பிளஸ், சியாமி, ஒப்போ, விவோ போன்ற முன்னணி பிராண்டுகளின் 100-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் விற்க இருக்கிறார்களாம். ஆக ஸ்மார்ஃபோன்களை மட்டுமே நம்பி, அமேஸான் எந்த அளவுக்கு பெரிதாக களம் இறங்குகிறது என இந்த ஆரிவிப்புகளைப் பார்த்தாலே தெரிகிறது.

டிவி 75% தள்ளுபடி

டிவி 75% தள்ளுபடி

அடுத்து டிவிக்கு வருவோம். அமேசானின் இந்த விழாக் கால விற்பனையில் டிவி போன்ற வீட்டு உபயோக சாதனங்களுக்கு சுமார் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்க இருக்கிறார்களாம். இந்த விற்பனையில் சாம்சங், வேர்ல்பூல், எல்ஜி, சியாமி, சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த விற்பனையில் பங்கேற்க இருக்கிறார்களாம். அதே போல பிரீமியம் ரக லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு சுமார் 40,000 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் விற்க இருக்கிறார்களாம். டி எஸ் எல் ஆர் ரக கேமராக்கள் மற்றும் இதர கேமராக்களுக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை தள்ளுபடி விலையில் விற்க இருக்கிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+