டெல்லி : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்று முன்பு நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11,52,000 ஊழியர்களுக்கு இந்த ரயில்வே போனஸ் வழங்க இருப்பதாகவும், இது தொடர்ந்து ஆறு வருடமாக கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னரே செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து கூறுகையில், இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போனஸ் என்றும், உற்பத்தித் திறன் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பின் மூலம் 11,52,000 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக கிடைக்கும். எனவும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறுகையில், இ-சிகரெட்டுகளைத் தடை செய்யப்படுவதாகவும், குறிப்பாக இளைஞர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஈ-சிகரெட்டுகள் பயன்பாடு குறையும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இ-சிகரெட்டுகளை தடை செய்வதவாகவும், அதாவது இ-சிகரெட்கள் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை தடை செய்யப்படுவதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதன்படி 400 வகையான சிகரெட் பிராண்டுகளையும், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இவற்றில் யாவும் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை என்றும், இந்த இ-சிகரெட் 150 சுவைகளில் வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த இ-சிகரெட் ஆனது பட்ஜெட்டில் 2,028 கோடி ரூபாய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எனினும் மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை மறப்பதற்காக இ-சிகரெட் முறை கொண்டு வரப்பட்டது, ஆனால் இதற்கு அடிமையானவர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications