அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்!

டெல்லி : எந்த அறிக்கையாக இருந்தாலும் பொருளாதார மந்தம், பொருளாதார சரிவு, வேலையிழப்பு, வேலையின்மை என தொடரும் செய்திகள்.

மறுபுறம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சவுதி அராம்கோ தாக்குதல், ரூபாய் வீழ்ச்சி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் என இப்படி தொடரும் செய்திகளுக்கு மத்தியில் ஆய்வாளர்களின் கருத்து வேறு.

அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்!

இந்த நிலையில் இதுவரை பல்வேறு ஆய்வாளர்கள் பலவாறு கருத்து கூறியிருந்தாலும், அவர்கள் அனவரின் ஒருமித்த கருத்தும், பொருளாதாரம் பின்னோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதே. இது ஒரு புறம் கவலை கொள்ளும் விதமாகவே இருக்கிறது என்றாலும், மறுபுறம், ஊழியர்களின் நிலை அதற்கு மேல்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த செய்தியொன்றில் இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இரவில் சரியான தூக்கமின்மை, பதற்றம், இரத்த அழுத்தம், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தின் நடுவில், இப்படி ஒரு கடுமையான போக்குகளை சந்திப்பதாகவும், இவர்கள் நகரங்களில் உள்ள மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள், தற்போது அதிகம் வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை, அந்த வேலைகளை செய்து முடிப்பதற்கான இலக்கு, அடைய முடியாத இலக்குகள் மற்றும் கட்டணங்கள் உள்ளிட்ட சிலவற்றை பற்றி இவர்கள் அனைவரும் புகார் கூறுகிறார்களாம். அதிலும் கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த ஆய்வுகள் ஊழியர்களிடம் மனச்சோர்வு மற்றும் கவலை தொடர்பான கோளாறுகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக காஸ்மோஸ் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நடத்திய ஒரு ஆய்வில், இந்த பாதிப்பானது மூத்த தொழில் வல்லுனர்களிடையே, மன நலத்தை சீரழிப்பதில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஊழியர்களின் மன அழுத்தம் தொடர்பான புகார்கள் 16 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் இவ்வாறு மன அழுத்தத்துடன் காணப்படுபவர்கள், குறிப்பாக நிதி சம்பந்தமான பிரச்சனை, வேலை போய்விடுமோ என்ற பயம், தொழில் நலிவடைந்து விடுமோ, பணம் போய்விடுமோ என்ற கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் சிலர் நிதிப் பிரச்சனையால் தற்கொலை வரைக்கும் கூட செல்கின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் ஊழியர்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகம் உள்ளது என்றும், அவர்கள் அதிகம் பேர் மனநல மருத்துவர்களை நாடி வருகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+