குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்..! தட்டித் தூக்கிய பங்கு விலை..!

உலகின் முன்னணி சிகரெட் பிராண்டுகளில் Marlboro என்கிற நிறுவனமும் ஒன்றும். இந்த பிராண்டின் சிகரெட்டுகளை இந்தியாவில் தயாரிப்பது எல்லாம் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட் (Godfrey Philips Indian Limited) என்கிற நிறுவனம் தான்.

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதியம் 3 மணி அளவில் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இ சிகரெட்டுகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, விற்க, விளம்பரம் செய்ய, ஏற்றுமதி செய்ய, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க என அனைத்துக்கும் தடை விதித்து இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்..! தட்டித் தூக்கிய பங்கு விலை..!

ஆக இதுவரை இ சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தவர்கள் தொடங்கி, இனி இ சிகரெட் பிடிக்கலாமா..? என யோசித்துக் கொண்டு இருந்தவர்கள் வரை அனைவரும் மீண்டும் பெட்டிக் கடைக்கு வந்து தான் சிகரெட்டுகளை வாங்க வேண்டி இருக்கும். எனவெ ஐடிசி, காட்ஃப்ரே பிலிப்ப்ஸ் இந்தியா லிமிடெட், வி எஸ் டி போன்ற சிகரெட் உற்பத்தியாளர்களின் பங்கு விலைகள் எல்லாம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலெயே டாப் கியர் போட்டு ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது.

இன்று காலை 955 ரூபாய் பத்து பைசாவுக்கு வர்த்தகமாக தொடங்கிய காட்ஃப்ரே பிலிப்ப்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், சுமாராக காலை 11 மணிக்கு 988 ரூபாய்க்கும் அதிகமாகி வrத்தகமானது. அதன்பின் மதியம் 2 மணி வரை சுமார் 975 ரூபாய் லெவலிலேயே வர்த்தகமாகி வந்தது. இ சிகரெட் தொடர்பாக செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் விலை தாறுமாறாக டாப் கியர் போட்டு ஏறத் தொடங்கியது.

இன்று ஒரே நாளில் காட்ஃப்ரே பிலிப்ப்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன பங்குகளின் விலை அதிகபட்சமாக 1024 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இ சிகரெட்களுக்கு தடைவிதித்த பின் ஏற்றத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தது 989 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. காட்ஃப்ரே பிலிப்ப்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை போல வி எஸ் டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலையும் நல்ல ஏற்றம் கண்டிருக்கிறது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+