59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்!

டெல்லி : வரவிருக்கும் பண்டிக்கை காலத்தையடுத்து பலர் அதை வாங்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. மாறாக சிலர் வீடு புதுப்பித்தல், வீடு கட்டுதல் என பல திட்டங்களை தீட்டுவர் .

ஆனால் போதிய நிதி தான் கையில் இருக்காது. ஆனால் இதற்கு வங்கிகளில் கடன் வாங்கலாம் என்றும் அதற்கும் நேரம் இருக்காது. அப்படியே அலைந்தாலும் விரைவில் முடிவு என்ன என்பது தெரியாது.

ஆனால் இனி அப்படி நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கி வங்கியாக தேடி அலைய வேண்டியதில்லை. PSB Loans in 59 Minutes என்ற போர்டலை பயன்படுத்தி உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், எவ்வளவு வட்டி என்பதை உட்கார்ந்த இடத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் போர்டலில் கடன் வாங்கிக் கொள்ளலாம்

ஆன்லைன் போர்டலில் கடன் வாங்கிக் கொள்ளலாம்

இனி நீங்கள் எந்த வங்கியியையும் தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மாறாக வங்கி உங்கள் கையிலேயே உள்ளது. PSB Loans in 59 Minutes என்ற இந்த போர்டலைத் தான் அவ்வாறு கூறினோம். குறிப்பாக எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளிலும் இந்த வசதியை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன் ஒப்புதல் செயல்முறையை விரைவாகவும், எந்த வித தொந்தரவும் இல்லாமலும் செய்வதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

முன்னர் சிறு தொழில்கள்

முன்னர் சிறு தொழில்கள்

கடந்த 2018ல், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடனை தாம் இம்முறையில் கொடுத்து வந்தன வங்கிகள். ஆனால் இப்போது இந்த முறையில் வீட்டுக் கடனுக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 59 நிமிடத்தில் 10 கோடி ரூபாய் வரை கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நன்மை, இனி அனைவருக்கும் கிடைக்கும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிகே குப்தா கூறியுள்ளார்.

இந்த கடனுக்கு தகுதியானவர்

இந்த கடனுக்கு தகுதியானவர்

சம்பளம் வாங்குபவராக இருந்தாலோ அல்லது சொந்தமாக தொழில் செய்து வருபவராக இருந்தாலும் சரி, இந்த கடனுக்காக பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் சம்பளதாராக இருந்தால், வருமான வரி அறிக்கையை ITR 1 அல்லது 2-ல் தாக்கல் செய்திருக்க வேண்டும். இதோடு கடைசி ஆறு மாத வங்கி அறிக்கையும் கையில் வைத்திருக்க வேண்டும், இதே சுயதொழில் செய்பவர் என்றால், வருமான வரி அறிக்கையை ITR 3 அல்லது 4-ல் தாக்கல் செய்திருக்க வேண்டும், இவர்களும் தங்களது வங்கி கணக்கிற்கான 6 மாத இ- ஸ்டேட்மென்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் வாங்க என்ன வேண்டும்?

இந்த கடன் வாங்க என்ன வேண்டும்?

மேலும் ஒருவர் இந்த கடன் வாங்குவதற்காக கடந்த ஒரு வருட வருமான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் ITR 1, 2 மற்றும் 4 பி.டி.எஃப் வடிவத்திலும், ITR 3 XML வடிவத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு கடந்த ஒரு வருடத்தின் வருமான வரி பதிவுகள் இல்லை எனில், அவர்களின் வருமானம் குறித்த தகவல்களை, இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதோடு கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை பி.டி.எஃப் வடிவத்தில் தேவைப்படும் என்றும், இது தவிர அவர்களது அடிப்படை தகவல்கள், வேலை சம்பந்தமான தகவல்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

எப்படி இணைய வேண்டும்

எப்படி இணைய வேண்டும்

பயனர்கள் இந்த வீட்டுக் கடன் திட்டத்தில் இணைய PSB Loans in 59 Minutes என்ற இணையதளத்தில் தங்களது மெயில் ஐ.டி அல்லது மொபைல் என்ணை கொடுத்து பதிவு செய்யும் போது, ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பாஸ்வேர்டு, தங்கள் பதிவு செய்த எண்ணுக்கோ அல்லது இணைய முகவரிக்கோ வருகிறது. இந்த ஓடிபியை அந்த இணையத்தில் கொடுக்கும் போது, அங்கு நீங்கள் வீட்டுக் கடன் என்ற ஆஃப்சனை தொடர்ந்து, உங்களது தகவல்களை அப்லோடு செய்ய வேண்டும். பயனர்கள் தங்களது கடன் தொகை, வட்டி விகிதம் செயல்பாட்டுக் கட்டணம் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, வேண்டியதை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.

59 நிமிடத்தில் கடன்

59 நிமிடத்தில் கடன்

இந்த இணையத்தின் மூலம் ஒரு விண்ணப்பதாரர் வெறும் 59 நிமிடங்களில் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற முடியும். விண்ணப்பதாரர் தேவையான தகவல்களை பதிவு செய்த பின்னர், விண்ணப்பம் மதிப்பிடப்பட்டு, இது கடன் தொகையை தீர்மானித்து பின்பு விண்ணப்பதாரரை வங்கியுடன் இணைக்கின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்தும் வெறும் 59 நிமிடங்கள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் உங்களது கடன் தொகையானது 7- 8 நாட்களுக்குள் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+