பயத்தில் உறைந்து இருக்கும் 23,000 ஊழியர்கள்.. எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை..!

பொருளாதார சரிவு, வேலையின்மை, வேலையிழப்பு, பணி நீக்கம், வேலையின்மை, நஷ்டம் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலை இந்தியாவைத் தான் ஆட்டிப்படைத்து வருகிறது என்றால், சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான்.

அதிலும் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான எல்.ஜி டிஸ்ஃபிளே, தொடர்ந்து கண்டு வரும் நஷ்டத்தால் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனம் என்ன செய்கிறது?

எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனம் என்ன செய்கிறது?

தென் கோரியாவை அடிப்படையாகக் கொண்ட எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனம், உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய அளவில் எல்.இ.டி டிஸ்ஃபிளேக்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனமாகும். எந்த பொருள் எடுத்தாலும் அதை படுவீழ்ச்சியில் விலை குறைவாக கொடுப்பதே இந்த சீனாவின் வேலை. இதன் மூலம் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி, அவர்களின் வர்த்தகத்தினை தாங்கள் கையில் எடுத்துக் கொள்ளவதே இவர்களின் வாடிக்கை. அந்த வகையில் மிக மலிவான விலையில் எல்.இ.டி பேனல்களை தயாரித்து, எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனத்திற்கு போட்டியாக கொடுத்து வருகின்றது சீனா. இதனால் பெறும் நஷ்டத்தினை கண்டுள்ள எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனம்.

சீனாவால் நஷ்டம்

சீனாவால் நஷ்டம்

இந்த எல்.இ.டி தயாரிப்பில் பெரிய அளவில் இதில் முதலீடு செய்துள்ள இந்த நிறுவனம், சீனாவின் போட்டியை சமாளிக்க முடியாத எல்.ஜி டிஸ்ஃபிளே நிறுவனம், பெறும் நஷ்டத்தினையே கண்டுள்ளது. எனினும் தற்போது அமெரிக்காவின் ஆப்பிள் போனுக்கு பெரும் சப்ளையராக மாறியுள்ள எல்.ஜி டிஸ்ஃபிளே, இது எந்த அளவுக்கு கைகொடுக்கு என்று தெரியாத நிலையில், முன்னர் ஏற்பட்ட நஷ்டத்தினை தவிர்க்கவும், லாபத்தினை அதிகரிக்கவும், தன்னார்வ பணி நீக்க திட்டத்தினை கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் நஷ்டம்

அதிகரித்து வரும் நஷ்டம்

சீனாவின் நுழைவால் ஒட்டுமொத்த எல்.இ.டி பேனல்களின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது என்றும், இதனால் இந்த நிறுவனம் தொடர் நஷ்டத்தினையே கண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டாவது காலாண்டில் 3,200 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனம் தன்னார்வ பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது இந்த நிறுவனம்.

இதெல்லாம் பெரும் தலைவலி

இதெல்லாம் பெரும் தலைவலி

தொடர் நஷ்டத்தினை கண்டு வரும் இந்த நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரியையையும் பணி நீக்கம் செய்துள்ளதோடு, தற்போது புது அதிகாரியையும் நியமித்துள்ளது. இந்த நிலையில் இந்த மாறுதலுக்கு அடுத்த நாளே இப்படி ஒரு திட்டத்தினை கையில் எடுத்துள்ளது இந்த நிறுவனம். மேலும் அமெரிக்கா சீனா வர்த்தக போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, இதனால் வரலாறு காணாத சரிவினை சந்தித்துள்ள சீனா, மறுபுறம் ஜப்பானில் ஏற்றுமதிக்கு தரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அதிகாரி யார்?

புதிய அதிகாரி யார்?

இந்த நிறுவனத்தின் மோசமான செயல்திறனுக்கான பொறுப்பை ஏற்க தலைமை நிர்வாகி ஹான் சாங் பீம் இந்த நிறுவனத்திலிருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக எல்ஜி கெம் நிறுவனத்தின் தலைவர் சுங் ஹோயங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம்

எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம்

இந்த நிறுவனத்தில் உலக அளவில் 59,000 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், உள்நாட்டில் உற்பத்தியில் 23,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் எத்தனை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த பணி நீக்கத்தால் எவ்வளவு செலவை மிச்சப்படுத்த முடியும் என்பதை இந்த நிறுவனம் தெளிவாக குறிப்பிடவில்லை.

இனி பேனல் தேவை அதிகரிக்கலாம்

இனி பேனல் தேவை அதிகரிக்கலாம்

கடந்த வாரம் ஆப்பிள் புதிய வகை மாடல்களை அறிமுகத்தையடுத்து, இது பேனல்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்றும், இது மூன்றாவது காலாண்டில் பேனல்களுக்கான தேவையை திகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் இது நஷ்டத்தினை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் எல்.ஜி. டிஸ்ஃபிளேக்கு சாதகமாக இருக்காது

ஸ்மார்ட்போன் எல்.ஜி. டிஸ்ஃபிளேக்கு சாதகமாக இருக்காது

எனினும் ஸ்மார்ட்போன் பயன்பாடு சர்வதேச அளவில் குறைந்து வருவதால், எல்ஜி. டிஸ்ஃபிளேக்கு இது சாதமாக அமைய வாய்ப்பில்லை என்று சுங் கூறியுள்ளார். கடந்த ஆண்டு உலக அளவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 4.1% வீழ்ச்சி கண்டு, 1.4 பில்லியன் யூனிட்களாக மட்டுமே இருந்தது என்றும் ஐ.டி.சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மந்தத்தின் எதிரொலி

உலக பொருளாதார மந்தத்தின் எதிரொலி

எல்.ஜி டிஸ்ஃபிளேயின் இந்த மறுசீரமைப்பு முயற்சிகள் உலகளாவிய தொழிநுட்பம் மந்தமடைந்து, வர்த்தகத்தில் தொய்வு ஏற்படும் நிலையையே காட்டுகிறது. மேலும் இது பரந்த தொழில்நுட்ப துறையின் படு வீழ்ச்சியாகும். இதே போட்டி நிறுவனமான சாம்சங் நிறுவனமும் சிப் மற்றும் பேனல் விலைகள் காரணமாக சாம்சங் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்க லாபம், கடந்த இரண்டாவது காலாண்டில் பாதியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்தவொரு தொழில் மீட்பும் அடுத்த ஆண்டு வரை செயல்படாது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனா அமெரிக்காவை அடுத்து அதிகளவு பொருட்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதை நாம் யோசிக்க வேண்டிய ஒன்று. இன்று எல்.ஜிக்கு ஏற்பட்ட நிலை தான் நாளை இந்திய நிறுவனங்களுக்கு. ஆக ஒவ்வொருவரும் இதை யோசித்து செயல்படுவது நல்லது என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+