இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி வேலையிழப்பு இதற்கு பொருளாதார மந்தம் தான் காரணம் என்று வெளியாகி வரும் அறிக்கைகள், இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

இது குறிப்பாக அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்லலாம். அமெரிக்காவின் மோட்டார் சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் டெட்ராய்ட் நகரை அடிப்படையாகக் கொண்டது தான் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.

மிகப்பெரிய வாகன உற்பத்தியும், பணக்கார நகரம் என்று அழைக்கபடும் நகரம், தற்போது திவாலாக தொடங்கியுள்ளது என்றால், பொருளாதர நெருக்கடி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

தற்காலிக பணி நீக்கம்

தற்காலிக பணி நீக்கம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கனடாவில் தனது அசெம்பிளி ஆலையை கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்த ஆலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த நிறுவனத்தின் உதிரி பாகங்களுக்கான தேவை அதிகம் உள்ள நிலையில், போராட்டத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் வேலையை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால், கடுப்பான நிர்வாகம் 1,200 ஊழியர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.

தோல்வியில் முடிவடைந்த பேச்சு வார்த்தை

தோல்வியில் முடிவடைந்த பேச்சு வார்த்தை

அமெரிக்காவின் இந்த ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் 3 நாட்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 48,000 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தற்காலிக பணி நீக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதிலும் அதிகாரிகள் இந்த போராட்டம் குறித்து சூமுகமான நிலை எட்டபட வேண்டும் என்ற நிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அப்படி எந்த சூமுகமான ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தின் காரணமாக தாக்கம் இருக்கலாம்

வேலை நிறுத்தத்தின் காரணமாக தாக்கம் இருக்கலாம்

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு தாக்கம் இருக்கலாம் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம் என்று கனடாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் பீட்டர்சன் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஓஷாவா ஆலை தொடர்ந்து செடானை தயாரிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் கனடா ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம், அமெரிக்கா அரசியல் வாதிகளிடையே தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றது என்றும் கூறப்படுகிறது.

இது ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நேரம் தான்

இது ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நேரம் தான்

ஜி.எம் நிறுவனத்தின் லாபம் சாதனை செய்துள்ள நிலையில் தான் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்கிறார்கள், ஆக நிறுவனம் இதை செய்து கொடுக்கலாமே என்பது அங்குள்ள அரசியல் கட்சிகளின் வாதமாக உள்ளது, அதுவும் சில கட்சிகள் இடு சரியான நேரம் தான் ஊழியர்கள் கேட்பதை செய்து கொடுக்கலாமே என்றும் கூறி வருகின்றன. ஆனால் இந்த நிறுவனமோ இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஊழியர்களுக்கு வழங்கி வந்த ஹெல்த் இன்சூரன்ஸை நிறுத்தியுள்ளதோடு, 1,200 ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

General Motors Lay off 1,200 workers at assembly plant in Canada

Lay off announcement came after 3 days about 48,000 hourly workers went on strike across GM facilities in the US, but there is no agreement.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X