ஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆன்லைன் வணிகம் அதிகரித்து வரும் நிலையில், நம் மக்கள் விதவிதமான மது வகைகளையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கின்றனர்.

அதிலும் அமேசான், பிளிப்கார்ட் போல ஆஃபர் கிடைத்தால் விடுவார்களா? நம் மக்கள். ஏற்கனவே மது போதைக்கு அடிமையாகி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோகமும் தொற்றிக் கொண்டால் பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம்.

ஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

அப்படி இருக்கும் பட்சத்தில் ஆன்லைனில் அதுவும் ஹோம் டெலிவரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இது இன்னும் மோசமான பின் விளைவுகளையே கொண்டு வரும் என்பதால், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மது விற்பனை மற்றும் டோர் டெலிவரியை தடை செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1, 2017ல் கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் மது, டெலிவரி, இது உள்நாட்டு சரக்குகள் மற்றும் வெளிநாட்டு சரக்குகளுக்கு, குறிப்பாக பீர், ஒயின் ஏல்.ஏ.பி, உள்ளிட்ட மது விற்பனையை ஒழுங்கு படுத்த கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஹிப்பார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எதிர்மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இம்மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்ததோடு, ஆன்லைனில் மது விற்பனையும் கூடாது, மேலும் டோர் டெலிவரியும் செய்யக் கூடாது என்றும் நீதிபதி எஸ்.சுஜாதா கூறியுள்ளார்.

மனித குலத்தின் ஆரோக்கியத்தை சீரழிக்கும், தீங்கு விளைவிக்கும் இதனால் பல குடும்பங்கள் சீரழியலாம். மேலும் அனுமதிக்கப்படாத வயதிற்குட்பட்ட குழந்தைகள் உட்பட இளம் தலைமுறையினர் இந்த மதுபான நுகர்விற்கு ஆளாகி, ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் கடுமையாக பிரச்சனையை சந்திக்க கூடும்.

மேலும் இதற்கு அடிமையாகி விடலாம். மனுதாரர் நிறுவனம் மேற்கொண்ட வர்த்தகத்தைக் கண்காணிப்பதோ அல்லது அதை ஆர்டர் செய்தவரின் வயது, உள்ளிட்ட பலவற்றை கண்கானிப்பது மிக கடினம். மேலும் நேரிடையாக விற்கும் மதுபான கடைக்களுக்கே ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதை சுட்டிக் காட்டியவர், இந்த ஆன்லைன் விற்பனையானது 24*7 மணி நேர விற்பனைக்கு வழிவகுக்கும். இது இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான ஒன்று அல்ல என்றும் நீதிபதி சுஜாதா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: karnataka liquor
English summary

karnataka HC not permit to liquor online sales and home delivery

Karnataka HC Justice not permit to sales online liquor and home deliveey, and she said there is a prescribed timing for sale, but this online sales could lead for 24*7
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X