இந்தியாவில் நில உரிமையாளர்கள் யார் என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கவும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒவ்வொரு சர்வே நிலத்திற்கும் உரியப் பிரத்தியேக எண்-ஐ வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளதாகத் தெரிகிறது.
பிரத்தியேக எண்
ஊரக வளர்ச்சி அமைச்சகம் நிலத்திற்கு வழங்கும் எண்களில் மாநிலம், மாவட்டம் அல்லது வட்டம், தாலுக்கா, பிளாக், தெரு வரையிலான விபரங்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணில் நிலத்தின் அளவீடு, உரிமையாளரின் விபரங்கள் ஆகியவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை unique land parcel number என அழைக்கப்பட உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இணைப்பு
இந்த பிரத்தியேக நில எண்களை ஆதார் மற்றும் வருவாய்த் துறையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த எண்கள் மூலம் நில விற்பனை எளிதாக்குவதோடு, வரி விதிப்பையும் எளிதாக்கும். அதேபோல் இயற்கை பேரிடரின் போது மீட்புக்கான திட்டமிடலும், அதன் எதிரொலிகளையும் கணக்கிட இது பெரிய அளவில் உதவும் எனவும் கூறப்படுகிறது.
அனைத்தையும் தாண்டி மத்திய மாநில அரசுத் திட்டங்களுக்கான நில கையகப்படுத்தலும் இத்திட்டத்தின் மூலம் எளிதாக்கப்படும் எனவும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
இந்தியாவில் பல சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனிநபருக்குக் கொடுக்கப்படும் ஆதார் போல நிலங்களுக்கு இந்த unique land parcel எண்.
ஏற்கனவே நிலங்களுக்கு GIS டேக் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இத்துறையை மேலும் டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியில் நிலங்களுக்கு இந்த பிரத்தியேக எண் வழங்கப்பட உள்ளது.
20 வருட பிரச்சனை
நிலத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் 20 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பல திட்டங்கள் இந்தியாவில் தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதை அளவிற்கு மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் குழப்பம் ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications