இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா தன் நெருங்க நன்பர்களுடன் சேர்ந்து புதிதாக ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்க உள்ளதாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
வல்லரசு நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்பதை சரியாக உணர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா இத்துறையில் தன் தலைமையில் புதிய நிறுவனத்தை துவங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
நண்பர்கள்
இப்புதிய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அருந்ததி பட்டாச்சார்யா உடன் அமெரிக்கன் இன்சூரர் AIG நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் முன்னாள் தலைவர் சுனில் மேத்தா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குனர் தீபக் ஈஷ்வர்பாய் அமின் ஆகியோர் இணைந்து இப்புதிய நிறுவனத்தை துவங்க உள்ளனர்.
வெல்மோ பின்டெக்
செப்டம்பர் 3ஆம் தேதி அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் சுனில் மேத்தா ஆகியோர் இணைந்து வெல்மோ பின்டெக் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சரியான திட்ட வரைமுறைகளோடு இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான உரிமத்தை பெற இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தனது விண்ணப்பத்தை சமர்பிக்க உள்ளது இந்த மூவர் கூட்டணி.
ஆர்1, ஆர்2, ஆர்3
இந்தியாவில் புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்க வேண்டும் என்றால் முதலில் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI என்று அழைக்கப்படும் Insurance Regulatory and Development Authority of India அமைப்பிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.
இப்படி புதிய நிறுவனம் துவங்க வேண்டும் என விண்ணப்பிக்கும் அனைத்து நிறுவனங்களையும் IRDAI ஆய்வு செய்து முதல்கட்ட ஆர்1 ஒப்புதலை கொடுக்கும். இதன் பின் ஆர்2, ஆர்3 இருக்கிறது.
100 கோடி ரூபாய்
இந்த நிறுவனத்திற்கு 2வது ஒப்புதலான ஆர்2 கிடைக்க வேண்டும் என்றால் வெல்மோ நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை காட்ட வேண்டும்.
இந்நிலையில் முதல்கட்ட ஒப்புதல் கிடைத்த உடன் முதலீட்டுக்காக இந்த மூவர் கூட்டணி வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications