டெல்லி : இந்திய அரசு என்ன தான் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இந்திய பொருளாதாரமானது படு பாதாளத்திலேயே இருந்து வருகிறது. அதிலும் உற்பத்தி துறை இன்னும் வீழ்ச்சி கண்டே காணப்படுகிறது. இதனால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 2019 - 2020ம் ஆண்டில் 5.9%மாகத் தான் இருக்கும் என்றும் OECD மதிப்பிட்டுள்ளது.
முன்னதாக பல அமைப்புகள் பல்வேறு விதமாக தங்களது அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு தான் என்று, மற்ற எல்லா மதிப்பீடுகளையும் விட குறைவாகவே வெளியிட்டுள்ளது ஓ.இ.சி.டி.
பாரிசை அடிப்படையாகக் கொண்ட தி ஆர்கனைசேஷன் ஃபார் எக்னாமிக் கோ-ஆப்ரேஷன் அன்ட் டெவலப்மென்ட் (The Organisation for Economic Co-operation and Development) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை காட்டும் ஜிடிபி விகிதத்தை குறைத்து 1.3% குறைத்து, 5.9%மாகத் தான் 2019- 2020ம் நிதியாண்டில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
வளர்ச்சி இப்படி தான்
இதே போல ஓ.இ.சி.டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவிகிதம் மட்டும் வளர்ச்சி காணும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இது முன்னர் மதிப்பிட்டதை விட 1.1 சதவிகிதம் குறைவு என்றும் கூறப்படுகிறது. பாரிசை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம் அமெரிக்கா - சீனா இடையேயான இந்த பிரச்சனை சர்வதேச அளவில் பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தின என்றும் கூறியுள்ளது.
வளர்ச்சி இப்படி தான்
இதே போல ஓ.இ.சி.டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவிகிதம் மட்டும் வளர்ச்சி காணும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இது முன்னர் மதிப்பிட்டதை விட 1.1 சதவிகிதம் குறைவு என்றும் கூறப்படுகிறது. பாரிசை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம் அமெரிக்கா - சீனா இடையேயான இந்த பிரச்சனை சர்வதேச அளவில் பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தின என்றும் கூறியுள்ளது.
பல காலமாக தொடரும் பொருளாதார மந்தம்
அமெரிக்கா - சீனா பிரச்சனையால் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்த பொருளாதார மந்தம் இன்று நேற்றல்ல, கடந்த 2008 - 2009ம் ஆண்டிலிருந்தே மந்தமாக தொடங்கிவிட்டது என்றும் இந்த அறிக்கையில் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு 3.6 சதவிகிதத்திலிருந்தது. ஆனால் இந்த ஆண்டு 2.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும், இது அடுத்த ஆண்டில் 3 சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி காணும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் வீழ்ச்சி
வளர்ந்து வரும் சந்தைகளில் வளர்ச்சி மிக மெதுவான வேகத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, மெக்ஸிகோ மற்றும் இன்னும் சில ஏற்றுமதி நாடுகளில் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும் என்றும் ஓ.இ.சி.டி மதிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனம் மதிப்பிட்டதை போலவே 2019 - 2020ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5.9 சதவிகிதம் தான் இருக்கும் எனில், இது கடந்த 2013 - 2014ம் ஆண்டில் கூட 6.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சீனாவின் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இப்படியே சென்றால் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது என்ற குறிச்சொல்லை இழக்க நேரிடும் என்றும் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியா தான் மிக மோசம்
ஓ.இ.சி.டி பொருளாதார அறிக்கைகள் வெளியிட்டுள்ள, மொத்தம் இந்தியாவோடு சேர்த்து ஏழு நாடுகளுக்கு வெளியிட்டுள்ளது. அதிலும் பொருளாதார வளர்ச்சியினை அதிகளவு குறைத்தது இந்தியா தான். இந்த லிஸ்டில் அர்ஜெண்டினா, பிரேசில், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.
மற்ற அறிக்கைகள் என்ன சொல்கிறது?
ஒரு புறம் ஓ.இ.சி,.டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9% என்று கூறியிருந்தாலும், மற்ற அமைப்புகள் அறிக்கைகளும் சரிவையே நோக்கிச் செல்லும் என்றே கூறுகின்றன. குறிப்பாக உலக வங்கி முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 7.5% இருக்கும் என்றும், இதே ஐ.எம்.எஃப் 7% என்றும், ஏடி.பி 7% என்றும், எக்னாமிக் சர்வே 7% என்றும், ஆர்.பி.ஐ 6.9% என்றும், ஓ.இ.சி,.டி 5.9% என்றும் கணித்துள்ளன.
எல்லா நாடுகளின் ஜிடிபியும் இப்படி தான்
இந்தியா மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்துமே ஜிடிபி விகிதத்தில் வளர்ச்சி குறைந்தே காணப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டில் உலக நாடுகளின் ஜிடிபி விகிதமும் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் 1.20% என்ற நிலையில் இந்த ஆண்டு 1.10% என்றும், ஜப்பான் முன்னர் 0.70%லிருந்து நடப்பாண்டில் 1%மாக அதிகரிக்கும் என்றும், லண்டன் 1.20%லிருந்து நடப்பு ஆண்டில் 1%மாகவும், அமெரிக்காவில் 2.80%லிருந்து, 2.40%மாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
என்னவாகும் $ 5 டிரில்லியன் இலக்கு?
என்னதான் அரசு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்று கூறினாலும், இந்த இலக்கை அடைய வருடத்துக்கு 8% சதவிகித வளர்ச்சியாவது இருக்க வேண்டும் என்ற நிலையில், இருக்கும் வளர்ச்சியையே காப்பாற்ற முடியாமல் அரசு திணறி வரும் நிலையில், இந்தியா இதே நிலையில் சென்றால் இந்த 5 டிரில்லியன் டாலரை அடையுமா என்பது சாத்தியமற்ற இலக்காகத் தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!



Click it and Unblock the Notifications