50 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு தலைப்பில் சொன்னதைச் செய்ய நேரம் ஆகுமா என்ன..?
ஏற்கனவே முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்கிற பெயரில் சூப்பர் 30 வரை பல படங்களைத் தயாரித்து இருக்கிறார். இப்போது இந்த சினிமா தயாரிப்பு வேலைகளில் அதிரடியாக களம் இறங்குகிறார் அண்ணன் முகேஷ் அம்பானி.
சினிமா தயாரிப்பைத் தாண்டி... ஒட்டுமொத்தமாக சினிமாவை ஒளிபரப்பும் உரிமைகளைக் கூட வளைக்க ஒரு பிரம்மாண்ட திட்டம் வைத்திருக்கிறார் நம் முகேஷ் அம்பானி.
எதற்கு..?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வழியாக, முதல் நாள் ரிலீஸாகும் சினிமாவை நேரடியாக தன் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வழியாக ஒளிபரப்புவதாகச் சொன்னார் இல்லையா..? ஆம் அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா..? அதற்கு விடை கொடுக்கும் விதமாக சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவை வாங்குவது என்கிற பிரமாதமான விடை உடன் களம் இறங்குகிறார் நம் முகேஷ் அம்பானி.
இலக்கு
வாரம் ஒரு புதிய சினிமாவை, தன் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வழியாக ஒளிபரப்ப பிரம்மாண்ட திட்டம் வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. ஆக வருடத்துக்கு 52 படம் தேவையாக இருக்கிறது. இப்படி வாரம் ஒரு புதிய சினிமாவை ஜியோ ஜிகா ஃபைபர் வழியாக அடுத்த 2 -3 ஆண்டுகளுக்குள் முழு வீச்சில் கொடுக்கத் தொடங்கி விடுவார்களாம். இதர்கு மூன்று வழிகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடை பிடிக்கப் போகிறார்களாம்.
3 வழிகள்
ஏற்கனவே முகேஷ் அம்பானியின் ஜியோ ஸ்டூடியோஸ் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோ மற்றும் ஆடியோக்களை தயாரிக்கிறார்களாம். எனவே இந்த ஜியோ ஸ்டூடியோஸ் வழியாக
1. சொந்தமாக கதை எழுதி, படத்தை தயாரிப்பது
2. மற்ற தயாரிப்பாளர்கள் உடன் இணைந்து படத்தை தயாரிப்பது
3. பக்காவாக முடிந்த படத்தை வாங்குவது
என தெளிவான மூன்று வழிகளோடு தயாராக இருக்கிறது ஜியோ ஸ்டூடியோஸ். ஏற்கனவே ஜியோ ஸ்டூடியோஸ் வெப் சீரிஸ்களை எல்லாம் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை மொழிகளில்
சரி தயாரிப்பது வாங்குவது எல்லாம் ஓகே, எத்தனை மொழிகளில் இந்த வேலைகளைச் செய்யப் போகிறார்கள் தெரியுமா..? 6 - 11 மொழிகளில் இந்த வேலைகளைச் செய்யப் போகிறார்களாம். இதை ரிலையன்ஸ் குழுமத்தின் மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரிவின் தலைவர் ஜோதி தேஷ் பாண்டேவே முன் வந்து சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு சினிமாவும் சுமார் 15 - 20 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
சி 2 ஹெச்
சரி அவர்களின் ஜியோ ஜிகா ஃபைபருக்காக தயாரிக்கிறார்கள் அதில் ஒளிபரப்புகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லையே எனக் கேட்கிறீர்களா..? அதெப்படி..? அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஆப்படிக்கும் விதத்தில் இன்னொரு பெரிய பிளான் வைத்திருக்கிறார்களாம். அது தான் நம் பிக் பாஸ் புகழ் சேரன் சொன்ன C2H ஃபார்முலா. சேரன் அன்று சொன்ன போது கண்டு கொள்ளாத திரை உலகம், இன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.
எங்களிடம் கொடுங்களேன்
ஜியோ வெறுமனே தானே தயாரித்து, தன் படங்களை மட்டுமே ஒளிபரப்பிக் கொண்டிருக்க விரும்பவில்லை. மாறாக ஒரு பெரிய சினிமா திரை அரங்கு உரிமையாளர் போல, தன்னிடம் படத்தைக் கொடுக்கச் சொல்கிறது. வெறுமனே இல்லை, பட தயாரிப்பாளர்களுக்கு திரை அரங்குகளில் கிடைக்கும் லாபத்தை விட கூடுதல் லாபத்தைக் கொடுக்கிறேன் எனப் பேசி வாங்கப் போகிறார்களாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், படத்தை ஜியோவிடம் விற்று விடச் சொல்கிறார்கள். அவர்கள் அதை ஜியோ ஜிகா ஃபைபர் வழியாக ஒளிபரப்பி ஒரு பகுதி லாபத்தைக் பட தயாரிப்பாளர்களுக்குக் கொடுப்பார்கள்.
சம்மதிக்க வைக்க வேண்டும்
படத்தை தயாரித்து வைத்திருப்பவர்கள், ஜியோ விடம் படத்தை விற்று நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை, தயாரிப்பாளர்கள் மத்தியில் வர வைக்க, ஜியோ ஸ்டூடியோஸில் படத்தை தயாரித்து, அதை ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வழியாக ஒளிபரப்பி ஒரு நல்ல லாபம் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் அடுத்தடுத்து சினிமா தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஜியோவிடம் விற்கத் தொடங்கி விடுவார்கள் தானே..? என புன்முறுவல் பூக்கிறார்கள் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் அதிகாரிகள்..!
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications