தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவில் காண்டம் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது. இது மக்கள் மத்தியிலும், அந்நாட்டு அரசு, சுகாதார அமைப்புகள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டீனா நாட்டில் தற்போது மிகப்பெரிய அளவில் ரெசிஷன், நாணய மதிப்பில் சரிவு, மோசமான அளவில் பணவீக்கம், வேலைவாய்ப்பு இழப்பு போன்ற பல தர பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் தற்போது காண்டம், கருத்தரித்தலைத் தடுக்கும் மாத்திரை விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. இதைப் பல வகையில் ஒப்பிட்டு நம்மால் பார்க்க முடியும்.
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சரிவால் மக்கள் கருத்தடை பொருட்களைக் கூட வாங்க முடியாமல் தவிக்கினர் என்று கூறலாம். ஆனால் உண்மையில் இது அந்நாட்டுப் பொருளாதார நிலைமையை மேலும் மேசமாக்கிவிடும் என்பது தான் உண்மை.
இதுநாள் வரையில் கருத்தடை பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் இந்நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்கும். இது எப்படியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
மக்கள்தொகை பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் கருத்தடை பொருட்களைப் பயன்படுத்தாத போது பல தரப்பட்ட நோய்கள் உருவாகவும் வழிவகுக்கும். இது மக்களின் வாழ்வியலைக் கடுமையான நிலைக்கும் தள்ளும்.
இக்காரணங்களுக்காகவே மக்கள் மத்தியிலும், அரசு மத்தியிலும் காண்டம் விற்பனையில் ஏற்பட்ட சரிவை மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் அர்ஜென்டீனாவில் காண்டம் விற்பனை 8 சதவீதமும், கருத்தடை மாத்திரைகளின் விற்பனை 6 சதவீதமும் குறைந்துள்ளது. இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் காண்டம் அனைத்திற்கும் மூலப்பொருள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் காண்டம்-இன் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதை வாங்க மனமும், பணமும் இல்லாமல் தவிக்கின்றனர்.
காண்டம் விலை மட்டும் இந்தச் சுமார் 36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
தென் அமெரிக்காவில் 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அர்ஜென்டீனா நடப்பு நிதியாண்டில் மட்டும் பொருளாதாரத்தில் 2.6 சதவீத சரிவு ஏற்பட்டு உள்ளது. நாட்டின் பணவீக்கம் 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் காண்டம் விற்பனை மட்டும் இல்லாமல் இந்நாட்டில் கார், மதுபானம், மாமிசம் அனைத்தும் சரிவை தத்தளிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications