ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது! நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை! சொல்வது யார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில தினங்களுக்கு முன், வழக்கம் போல பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

சந்திப்பின் நடுவில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சரிவுக்கு, ஓலா உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லி பரவலான கவனத்தை ஈர்த்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நெட்டிசன்கள் வைத்து செய்துவிட்டார்கள்..! கிட்ட தட்ட நிர்மலா சீதாராமன் உலக டிரெண்ட் ஆகிவிட்டார். அப்போதே மாருதி நிறுவனம் நிதி அமைச்சருக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்தது.

அப்போது மாருதி அதிகாரி
 

அப்போது மாருதி அதிகாரி

இந்தியாவில் இன்னும் கார்களை சொந்தமாக வாங்கும் கலாச்சாரம் மாறவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் ஓலா உபர் போன்றவைகளை பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை பெரிதாக பாதிப்படைகிறது எனச் சொல்ல முடியாது. ஓலா உபரால் தான் இந்திய ஆட்டோமொபைல் விற்பனை சரிகிறதா..? என ஒரு தெளிவான ஆராய்ச்சி வேண்டும் எனச் சொல்லி இருந்தார் மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவின் செயல் இயக்குநர் சசாங்க் ஸ்ரீவஸ்தவா.

இப்போது மாருதி தலைவர்

இப்போது மாருதி தலைவர்

நிதி அமைச்சகம் மாருதி சுசூகி நிறுவனத்தை அழைத்து என்ன சொன்னார்களோ தெரியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன் "நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது 100 % சரி தான். ஓலா உபரால் இந்திய ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது" என இப்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா தன் வாயாலேயே பல பத்திரிகைகளுக்குச் சொல்லி இருக்கிறார்.

ஏன்

ஏன்

ஏன் இன்றைய காலத்து இளைஞர்கள், ஓலா மற்றும் உபர் போன்ற டாக்சி அக்ரிகேட்டார்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்..? என்கிற கேள்விக்கு "இன்றைய இளைஞர்கள் குறிப்பாக சம்பாதிக்கும் இளைஞர்கள், கார்களை வாங்குவதற்கு பதிலாக ஓலா உபர்களை புக் செய்து கொள்கிறார்கள். மீதப் பணத்தை வைத்து அவர்களுக்குத் தேவையான கேட்ஜெட்களை வாங்கிக் கொள்கிறார்கள்" எனச் சொல்லி இருக்கிறார் மாருதி சுசூகி தலைவர் ஆர் சி பார்கவா.

செலவழித்தல்
 

செலவழித்தல்

மேலும், "இன்றைய காலத்து இளைஞர்கள் புதிதாக வரும் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க விரும்புகிறார்கள், நண்பர்களோடு நிறைவாக உணவகங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். இப்படியாக தங்கள் பொழுதை சிறப்பாக கழிக்கிறர்கள். இந்த மாதிரி செலவழிக்க நினைக்கும் போது கார்களை வாங்கினால், மேலே சொன்ன செலவுகளுக்கான சேமிப்புகள் பெரிய அளவில் குறைகிறது" எனவும் பலமாகச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார் ஆர் சி பார்கவா.

செலவு மிச்சம்

செலவு மிச்சம்

பொதுவாக இந்திய இளைஞர்களுக்கான சம்பளம் என்பது அதிகம் கிடையாது. இப்படி ஒரு மிதமான சம்பளம் வரும் போது அவர்களுடைய முதல் காரை வாங்குவதா..? அல்லது நிம்மதியாக பொழுதை கழிப்பதா..? எனப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக பொழுதை கழிக்கவே விரும்புகிறார்கள். காரணம் அவர்கள் காரில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஓலா உபர் இருக்கிறார்கள். அதுவும் குறைந்த செலவில் காரில் பயணம் செய்ய வைக்கிறார்கள் எனவும் சொல்லி இருக்கிறார்.

யார் கருத்து

யார் கருத்து

சில வாரங்களுக்கு முன் இதே மாருதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் சசாங்க் ஸ்ரீவஸ்தவா தான் ஓலா உபரால் எல்லாம், இந்திய ஆட்டோமொபைல் துறை விற்பனைக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனச் சொன்னார். ஆனால் இப்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவரே வந்து ஓலா உபர் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்கிற ரீதியில் "நிதி அமைச்சர் சொன்னது 100 % உண்மை" என வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இதில் யார் கருத்தை எடுத்துக் கொள்வது என்று தான் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki says Ola uber leads to automobile slowdown

Maruti Suzuki chairman says that Ola uber leads to automobile sales crash. The Maruti chairman also accept that the finance statement was 100 % correct
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X