இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்!

ஆட்டோமொபைல் துறை அதள பாதளத்தில் அல்லவா இருக்கிறது. அதிலும் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகள் முழுவதும் இந்த துறையில் இப்படி தானே இருக்கிறது என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே வருகிறது.

ஏற்கனவே பொருளாதார மந்தம், நிதிப்பற்றாகுறை, விற்பனை சரிவு, விலை குறைப்பு என கொடுத்தும், எந்த மாற்றமும் இல்லாததால் கவலை கொண்டுள்ள நிறுவனங்கள், வரும் பண்டிகை காலத்தில் மேலும் தள்ளுபடிகள் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாருதி சுசூகியில் தலைவர் ஆர்.சி. பார்கவா இது குறித்து கூறுகையில், ஏற்கனவே நிலவி வரும் பொருளாதார மந்தம், விற்பனை சரிவு, விலை வீழ்ச்சி என பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்க, கார்களின் விலையை குறைத்துள்ளன.

வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்

வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்

இந்த நிலையில் மீண்டும் வாடிக்கையாளர்கள் விலையை குறைக்கப்படுமா என்றும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே விலையை சாதகமான நிலைக்கு குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைக்கப்பட வேண்டுமாயின், விலை குறைப்பினை காண, வாடிக்கையாளர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

யார் யார் கலந்து கொண்டனர்

யார் யார் கலந்து கொண்டனர்

இது குறித்தான கருத்தரங்கில் மாருதி சுசூகி பார்கவா, மணிபால் குளோபல் எஜூகேஷன் தலைவர் மோகன்தாஸ் பாய், மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனர் பவன் கோயங்கா, கோத்ரேஜ் குரூப் தலைவர் ஆதி கோத்ரேஜ், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், பிரமால் குழுமத் தலைவர், அஜய் பிரமால், ஹிராந்தினி குழும தலைவர் நிரஜ்சன் ஹிராந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எம் & எம் நிறுவனத்தின் நிறுவனர் கோயங்கா, மகேந்திரா நிறுவன கார்களுக்கு ஏற்கனவே 20% விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வாகனங்கள் விலையை குறைக்க வேண்டும்

வாகனங்கள் விலையை குறைக்க வேண்டும்

இதே நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கவும், தேவையை கூட்டவும், உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதிலும் தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையில், ஆட்டோமொபைல் துறை தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம், 36 சதவிகிதம் சரிந்து, 93,713 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருப்பதாகவும், இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாருதி தொடர்ந்து, 1 லட்சம் வாகனங்களுக்கு கீழ் விற்பனை சரிவைக் கண்டு கொண்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

முதலீடுகளை அதிகரிக்க உதவும்

முதலீடுகளை அதிகரிக்க உதவும்

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5%மாக சரிவடைந்துள்ளது என்றும், எனினும் அரசு உற்பத்தியினை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கையினை தொடர் எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்துள்ளது என்றும், முன்னதாக 30% இருந்த வரியினை 22%மாகவும், புதியதாக உற்பத்தி நிறுவனங்களை தொடங்கும் நிறுவனங்களுக்கு 15% வரியினையும் விதித்துள்ளார்.

இந்த வரிக் குறைப்பானது இன்னும் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும், இதனால் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+