இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் சோதனை முயற்சியாக, டெல்லி - லக்னோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு, ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட, இந்த முதல் ரயில் தனியார் தேஜஸ் ரயிலில் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
தனியாரின் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த ரயில், அடுத்து வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் இயக்கப்படும் என்றும், அதுவும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், வியாழக்கிழமை மட்டும் இயங்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த முதல் தனியார் ரயிலை அக்டோபர் 4ம் தேதி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் இந்த தனியார் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தனியார் ரயிலுக்கான பதிவு தொடக்கம்
நாட்டின் முதல் தனியார் ரயிலான இது தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளதாகவும், அக்டோபர் 4ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், அதற்கு அடுத்த நாள் இது செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது புதுடெல்லி முதல் லக்னோ வரை செல்லும் என்றும், ஏற்கனவே இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 2,000 மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் இதே லக்னோ - டெல்லி வரை செல்லவும் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு கட்டணம்?
இந்த முதல் தனியார் ரயிலில் லக்னோ முதல் டெல்லி வரை ஏசி ஷேர் காருக்கு 1,125 ரூபாய் என்றும், இதே ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் 2,310 ரூபாய் என்றும், இதே வரை டெல்லி - லக்னோ வரை செல்ல ஏசி ஷேர் காருக்கு 1,280 ரூபாய் என்றும், இதே ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் 2,450 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே ஏசி ஷேர் காரில் லக்னோ - கான்பூர் வரை 320 ரூபாய் என்றும், இதே ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் 630 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஃபிளக்சி கட்டண முறை
இதே லக்னோ - காஸியாபாத் வரை செல்ல ஏசி ஷேர் காருக்கு 1,125, ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் 2,310 ரூபாய் என்றும், இதே டெல்லி - கான்பூர் வரை செல்ல ஏசி ஷேர் காரில் 1,155 ரூபாய் என்றும், 1,125, ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் 2,155 ரூபாய் என்று இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . எனினும் இந்த ரயிலில் ஃபிளக்சி கட்டண முறை இருப்பதால் கட்டண விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்கெங்கு நிறுத்தம்
இந்த தனியார் ரயில் லக்னோ - டெல்லி வரையிலான தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடத்தில் கடக்கும் என்றும், எனினும் இது கான்பூர் மற்றும் காஸியாபாத்தில் மட்டும் இந்த ரயில் நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேஜஸ் ரயில் தனது லக்னோவிலிருந்து காலை 6.10க்கு தொடங்கி, மதியம் 12.25க்கு டெல்லியை அடைகிறது. பிறகு புது டெல்லியில் இருந்து 4.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10.45 மணிக்கு அடையும் என்றும் கூறப்படுகிறது.
உணவு கட்டணம்
இந்த ரயிலில் பயணம் செய்யும் ஏசி ஷேர் கார் மற்றும் ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் இரண்டு உணவு காம்போ உள்ளது என்றும், பயணம் முழுவதும் செய்யும் பயணிக்கு அதாவது லக்னோ முதல் டெல்லி வரை செல்லும் பயணிக்கு, அவர்களின் டிக்கெட் கட்டணத்திலேயே, உணவு கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏசி ஷேர் கார் பயணிகளிடமிருந்து ரூ.185ம், இதே ஏசி எக்ஸ்கியூடிவ் ஷேர் கார் பயணியிடமிருந்து ரூ.245 கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே டெல்லி முதல் லக்னோ வரை செல்லும் பயணிகளுக்கு முறையே 340 மற்றும் 380 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications