கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்ற அளவுக்கு, பிரச்சனையை மேற்கொண்டுள்ளது ஏர் இந்தியா.
ஏர் இந்திய விமானத்தில் சிகாகோவிலிருந்து டெல்லி வரை பயணித்த சைவ பிராமண தம்பதிக்கு அசைவ உணவை கொடுத்தற்காக அபராதம் விதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 2016ம் ஆண்டு சைவ பிராமண தம்பதிக்கு, அசைவ உணவை மாறிக் கொடுத்தமையால் கடுப்பான தம்பதிக்கு வழக்கு பதிவு செய்ததையடுத்து, ஏர் இந்தியாவுக்கு 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
The Punjab Consumer Disputes Redressal Commission தவறான சேவைக்காகவும், ஏர் இந்தியா தனது சேவை தரத்தினை குறைத்ததற்காகவும் அபராத தொகையை நான்கு மடங்கு அதிகரித்து செலுத்த வேண்டும் என்றும், 10,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் தம்பதியினருக்கு சட்ட செலவாக 7,000 ரூபாயாக செலுத்த ஏர் இந்தியாவை நுகர்வோர் மன்றம் கூறியுள்ளது. மேலும் கமிஷன் உத்தரவுகளின் அபராதத் தொகையை டெபாசிட் செய்ய நேஷனல் கேரியர் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தோல்வியுற்றால் அபராதத் தொகையில் 12% வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து புகார் அளித்திருந்த சந்திர மோகன் பதக், பஞ்சாபின் மொஹாலியின் 121ம் பிரிவில் வசிப்பவர் என்றும், அவருக்கும் அவரது மனைவிக்கும் புதுடெல்லியில் இருந்து சிகாகோவுக்கு ஜூன் 17, 2016 அன்று முன்பதிவு செய்ததாகவும், நவம்பர் 14 அன்று சிகாகோ முதல் புது டெல்லி வரை முன் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மோகன் பதக் தனது புகாரில், தனக்கும் அவரது மனைவிக்கும், சைவ உணவை அளிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியிருந்ததாகவும், புது டெல்லி - சிகாகோ வரை செல்லும் போது, வழங்கப்பட்ட உணவு மோகன் பதக்கிற்கு சரியான உணவை அளிக்க வேண்டும் என்றும், ஆனால் சிகாகோவில் இருந்து டெல்லி திரும்ப வரும் போது உணவில் ஏதும் சுவை மாற்றம் இருந்ததாகவும், அதில் இறைச்சி துண்டுகள் இருந்ததாகாவும் கூறியுள்ளார்.
மேலும் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட அந்த உணவு பொட்டலங்களில் சரியான குறிப்புகள் இல்லை என்றும், இதை உடனடியான நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மோகன் பதக் ஏர்லைன் புகார் புத்தகத்தில் எழுத விரும்பியதாகவும், ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை என்றும், பின்னரே பதக் நுகர்வோரை நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தம்பதிக்கு உணவு வழங்கும் முன்பு நிர்வாகம் அதை சோதித்திருக்க வேண்டும் என்றும், சைவ தம்பதிகளுக்கு அசைவ உணவை அளித்தது நிர்வாகத்தின் தவறு என்பதை விட, அது கடவுளின் பார்வையில் ஒரு பாவமும் கூட என்றும், இதன் மூலம் ஏர் இந்தியா விமான பயணிகளின் மத உணர்வுகளையும் புண்படுத்துகிறது என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications