ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பாவனாக இருக்கும் அமேசானுக்கு அடுத்தபடியாக இருக்கும், பிளிப்கார்ட் நிறுவனமும் தற்போது பிக் பில்லியன் டே சலுகையினை அறிவித்துள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்களை குறி வைத்து ஆரம்பிக்கும் இந்த சலுகை நாட்கள், செப்டம்பர் 29ம் தேதி ஆரம்பித்து, 6 நாட்கள் நடைபெற உள்ளது.
சாதரணமாகவே இங்கு விலை குறைந்த நிலையில், தற்போது இந்த பிக் பில்லியன் டேவில் இன்னும் தள்ளுபடிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி என்ன சலுகை
விற்பனையை அதிகரிக்க சில்லறை விற்பனை, நோ காஸ்ட் இ.எம்.ஐ, கேஸ் ஆன் டெலிவரி உள்ளிட்ட பல சலுகைகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதிலும் இந்த சலுகையால் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு 17 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் 55 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரிப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிரெடிட் கார்டு உபயோகம் அதிகரிப்பு
நடப்பாண்டில் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதியதாக கிரெடிட் கார்டு உபயோகம் அதிகரித்துள்ளது என்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பொருளாதார மந்தம் மற்றும் விற்பனை மந்தம் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் எங்களுக்கு அவ்வாறு இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. மாறாக விற்பனை அதிகரிக்கும் என்றும், அதிலும் பிக் பில்லியன் டே விற்பனை களைகட்டும் என்றும் இந்த நிறுவனம் முன்னதாக ஒர் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சலுகை அதிகம்
சாதரணமான நாட்களில் இருப்பதை விட இந்த பிக் பில்லியன் டேவில் சலுகை அதிகமாக இருக்கும், அதிலும் சில நேரங்களில் சலுகையானது 80% வரை கூட இருக்கும். இதனால் வழக்கத்தை விட, இந்த சமயத்தில் விற்பனை அதிகரிக்கும். அதிலும் இந்த குறிப்பிட்ட 5 நாட்களில் மட்டும் பிளிப்கார்டில் 1 - 1.1 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை கள்ளா கட்டும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு இது தான்
இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் விற்பனை 14 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும், இதே முந்தைய ஆண்டில் 45% அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் கடந்த 8 - 12 மாதங்களில், இ.எம்.ஐ, நோ காஸ்ட் இ.எம்.ஐ என பல சலுகைளால் விற்பனை அதிகரிக்கும் என்றும், அதுவும் இந்த சமயத்தில் 25% அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிக் பில்லியன் டே சலுகையானது, கடந்த 2014ல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த சமயத்தில், ஒரு நாள் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 29 முதல், அக்டோபர் 4 வரை இந்த சலுகையானது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் விற்பனை 32% வளர்ச்சி காணும் என்றும், இதே 2022ல் 82 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications