உலகின் சிறந்த 250 நிறுவனங்களில் 17 இந்திய நிறுவனங்கள்.. இன்ஃபோசிஸ் தான் இந்தியாவில் டாப்!

டெல்லி : உலகின் தலைசிறந்த 250 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு, வெறும் 12 நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

இதில் குளோபல் பேமென்ட் டெக்னாலஜி முதலிடத்திலும், இத்தாலியின் கார் உற்பத்தி நிறுவனமான ஃபெராரி நிறுவனம் இரண்டாவது இடத்திலும், இதே ஐ.டி துறையில் முக்கிய நிறுவனமான இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் 31வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவைகள் தான் டாப் 10

இவைகள் தான் டாப் 10

1. குளோபல் பேமென்ட் டெக்னாலஜி
2. ஃபெராரி
3. இன்ஃபோசிஸ்
4. நெட்பிளிக்ஸ்
5. பேபால்
6. மைக்ரோசாப்ட்
7. வால்ட் டிஸ்னி
8. டொயோட்டோ
9. மாஸ்டர் கார்டு
10. காஸ்ட்கோ

இந்தியாவில் இவை தான் டாப்

இந்தியாவில் இவை தான் டாப்

இந்தியாவை பொறுத்தவரை உலகின் சிறந்த 250 நிறுவனங்களில் 17 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்ஃபோசிஸ் மூன்றாவது இடம். டி.சி.எஸ் -க்கு 22வது இடம், இதே டாடா மோட்டார்ஸ் 31வது இடத்திலும், டாடா ஸ்டீல் 105 இடத்திலும், லார்சன் & டூப்ரோ 115 இடத்திலும், மகேந்திரா & மகேந்திரா 117 இடத்திலும், ஹெச்.டி.எஃப்.சி 135 இடத்திலும், பஜான் ஃபின்செர்வ் 143வது இடத்திலும், பிரமல் எண்டர்பிரைசஸ் 149வது இடத்திலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 153வது இடத்திலும், ஹெச்.சி.எல் டெக்னாலஜி 157வது இடத்திலும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் 157வது இடத்திலும், விப்ரோ 168வது இடத்திலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 204வது இடத்திலும், சன் ஃபார்மா 217வது இடத்திலும், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 224வது இடத்திலும், ஐ.டி.சி 231வது இடத்திலும், ஏசியன் பெயின்ட்ஸ் 248வது இடத்திலும் உள்ளன.

அமெரிக்க நிறுவனங்கள் இத்தனை

அமெரிக்க நிறுவனங்கள் இத்தனை

உலகின் தலைசிறந்த இந்த பட்டியியலில் 59 அமெரிக்க நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதே ஜப்பான், சீனா, இந்தியாவில் மொத்தம் 82 நிறுவனங்களும், இதில் ஆசிய கண்டத்திலேயே பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களை கொண்டுள்ளதாகவும், இது பின்னாளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கண்டமாக மாறும் என்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

எத்தனை நிறுவனங்கள் ஆய்வு

எத்தனை நிறுவனங்கள் ஆய்வு

உலகின் 2000 பெரிய பொது நிறுவனங்களின் வருடாந்திர பட்டியலை நம்பகத்தன்மை, சமூக நடத்தை, அவற்றின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வலிமை, முதலாளிகளாக அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதன் அடிப்படையில், தரவரிசைப்படுத்தப்பட்ட, சிறந்த 250 நிறுவன வணிகங்களின் தரவரிசைகளை அறிய, ஃபோர்ப்ஸ் ஸ்டாடிஸ்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ஃபோர்ப்ஸ், 50 நாடுகளில் இருந்து 15,000 நிறுவனங்களை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+