டெல்லி: பில்லியனரான முகேஷ் அம்¬பா¬னியின், ரிலையன்ஸ் இண்¬டஸ்ட்ரீஸ் நிறு-வ¬னத்தின் பங்கு விலை, கடந்த செவ்வாய் கிழமையன்று மட்டும் 5 சதவிகிதம் அதிகரித்து 8 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்று மார்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று ரிலையன்ஸ் இண்¬டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 5% உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, சிறந்த சுத்திகரிப்பு பிரிவிலான லாபம், குறைந்த வரி விகிதம், குறைந்த எரிவாயு செலவுகள் ஆகியவற்றிலிருந்து ஊக்கமளிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பங்கு சென்செக்ஸூக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது என்றும், அதன் குறியீட்டை 150 புள்ளிகள் ஏற்றம் காண உதவியது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பங்கு விலை அதிகரிப்பின் காரணமாக, இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஒரே நாளில், 31,000 கோடி ரூபாய் உயர்ந்து மீண்டும் 8 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதே இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த டி.சி.எஸ் நிறுவனம் அதன் சந்தை மூலதனத்திலிருந்து 1.43 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் சேவை நிறுவனங்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாதது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்-டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், அதிலும் 2020ல் தெளிவான வளர்ச்சியில், தெற்காசியாவில் முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வளர்ச்சி நன்றாக இருப்பதாகவும், இதனால் இந்த நிறுவனம் முதலிடத்தில் இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் இண்¬டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் 29 - 35 சதவிகிதமாக கார்ப்பரேட் வரியை செலுத்தியது, ஆனால் இனி புதிய கார்ப்பரேட் வரி விகிதத்தால், இந்த நிறுவனம் இனி 25.2 சதவிகித வரியை மட்டுமே செலுத்தும் என்றும் கூறியுள்ளது இந்த அறிக்கை.
இது தவிர கச்சா எண்ணெய் விலை உய¬ரும்போது, உள்¬நாட்டில் அதன் உற்¬பத்-தியில் ஈடு¬பட்¬டுள்ள ரிலையன்ஸ் நிறு¬வ¬னத்தின் வரு¬வாயும், லாபமும் மேலும் அதி¬க¬ரிக்கும். இதன் விளை¬வாக, நிறு¬வ¬னத்தின் சந்தை மூல¬தனம் உயரும் என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மதிப்¬பிட்¬டுள்¬ளது. ஆக எல்லா வகையிலும் முகேஷ் அம்பானிக்கு சாதமாகவே அமைந்துள்ளது என்றும், இதனால் இந்தாண்டில் முகேஷ் அம்பானிக்கு சந்தோஷமும் பண மழை தான்.


Click it and Unblock the Notifications