90,000 பேருக்கு வேலை.. அதிரடி காட்டும் அமேசான்.. அசத்தலான வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி வரும் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றும், அதற்காக புதியதாக இந்தியாவில் 90,000 பேரை பணியாளர்களாக பணியமர்த்த உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சீசனல் வேலையானது, வேலையில்லாமல் தவித்து வரும் பலருக்கு, இந்த நேரத்தில் கைகொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வேலை வாய்ப்புகளானது தற்காலிகம் என்றாலும் பண்டிகை காலத்தில் பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓவர் ரேட்.. முகேஷ் அம்பானிக்கு ஓவர் ரேட்.. முகேஷ் அம்பானிக்கு "பை பை" சொன்ன அமேசான்..!

அமேசான் இந்தியன் திருவிழா விற்பனை

அமேசான் இந்தியன் திருவிழா விற்பனை

குறிப்பாக டெலிவரி செய்தல், பேக்கேஜிங், விநியோக நிலையங்கள், நெட்வொர்க் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் என அனைத்து துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆன்லைன் ஜாம்பவானான அமேசான் இந்தியன் திருவிழா விற்பனை 2019 (Great Indian Festival Sale 2019) என்ற திருவிழா கால சலுகையை கடந்த செப்டம்பர் 19 முதலே ஆரம்பித்துள்ளது.

அப்படி என்ன ஸ்பெஷல்

அப்படி என்ன ஸ்பெஷல்

இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஷேல் 2019ல் தள்ளுபடிகள் ஏராளம் என்பதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களான ஸ்மார்ட்போன் மற்றும் டிவி, நுகர்வோர் மின்சாதன பொருட்கள், உள்ளிட்ட பல பொருட்களுக்கு தள்ளுபடிகளும் மற்ற சலுகைகளும் ஏராளம் என்பதால், இந்த விற்பனை நிச்சயம் களைகட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமேசான் இந்த விழாக்கால விற்பனையை மேம்படுத்த, இன்னும் விரிவாக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்றும் அமேசான் கூறியுள்ளது.

எங்கெங்கு இந்த வேலை வாய்ப்பு?

எங்கெங்கு இந்த வேலை வாய்ப்பு?

குறிப்பாக இந்த சீசனல் வேலைவாய்ப்பானது மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் புனே உள்ளிட்ட பல நகரங்களில் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமேசானின் இந்த திருவிழா காலங்களில், மறைமுகமாகவும் பல ஆயிரணக்கணக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், குறிப்பாக டெலிவரி பார்ட்னர்கள், பேக்கேஜிங் துறை, ஹவுஸ்கீப்பிங் ஏஜென்சிஸ், இது தவிர இன்னும் பல மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரட்டை வாய்ப்புகள்

இரட்டை வாய்ப்புகள்

நடப்பு மாத தொடக்கத்தில், மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய அளவிலான அலுவலகம் ஒன்றை திறந்தது அமேசான். இதில் இரண்டு மடங்கான பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் இதனால் இங்கு பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது அமேசான் திருவிழா கால விற்பனை, பிக் பில்லியன் டே என தொடர்ந்து பல தள்ளுபடிகளை கொடுத்துக் கொண்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India officially announced to adds 90,000 jobs in Indian festival season 2019

Amazon India announced to adds 90,000 jobs in Indian festival season 2019, and it’s said will create more indirect jobs in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X