டெல்லி : நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.5% மட்டும் தான் இருக்கும் என்றும் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க் தெரிவித்துள்ளது.
இந்த ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க் முன்னர் 7 சதவிகிதமாக கணித்திருந்த நிலையில், கடந்த முதல் காலாண்டில் நுகர்வு குறைந்த நிலையில், உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் முதலீடுகள் பாதிக்கப்பட்டிருந்ததால் இவ்வளர்ச்சி குறையும் என்றும் இந்த வங்கி அறிவித்துள்ளது.
எனினும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் அடுத்த காலாண்டுகளில் முதலீடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும், இதனால் 2020 - 2021ம் நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக வளர்ச்சி அதிகரிக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது இவ்வங்கி.
உற்பத்தி வீழ்ச்சி
பணப்புழக்கம் சரிவால் தேவை குறைவு, பண நெருக்கடி மேலும் நுகர்வு தேவை குறைவால் உற்பத்தி சரிவு இதனால் கடந்த ஜூன் காலாண்டில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் தனியார் நுகர்வு செலவானது 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.1 சதவிகிதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கும், இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் மேம்படும் என்றும் ஏடிபி வங்கியின் தலைமை பொருளாதார நிபுனர் யாசுயுகி சவடா கூறியுள்ளார்.
இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கும்
அதிலும் கடந்த செப்டம்பர் 20 அன்று இந்திய அரசு கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைத்தது. இதனால் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பானது இந்திய நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த உதவும் என்றும், இதே வங்கிகளுக்கு மறுமூலதன நிதியளித்துள்ளதால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் மேம்படும் என்றும், அதே மானிட்டரி பாலிசியின் மூலம் வட்டி விகிதத்தினை குறைப்பது, நிதி நிலைமையை சீராக்கும் என்றும், இது கடன் வழங்குதலை அதிகரிக்கும் என்றும், இது கடன் மற்றும் கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சியை கொடுக்கு என்றும் கூறப்படுகிறது.
ஏற்றுமதி அதிகரிக்கும்
உலக அளவில் நிகழ்ந்து வரும் பிரச்சனையால் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறை 2019 - 2020ம் நிதியாண்டில் 2.2 சதவிகிதமாகவும், இதே 2020ம் நிதியாண்டில் 2.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும், அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையால், சீனாவின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பலாம் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது. எனினும் இந்திய அரசு முதலீடுகளை அதிகரிக்க தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியால் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications