டெல்லி : காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவில் பணி நீக்கம் இல்லை என்று கூறி, கிட்டதட்ட 2 லட்சம் இந்திய ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில், கடந்த 2018ம் ஆண்டு அடிப்படையில் சுமார் மொத்தம் 2,81,600 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், இதில் 70% பேர் இந்தியர்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் பெருத்த நஷ்டத்தை கண்டுள்ளதாகவும், இதனால் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாகவும், இந்த நிறுவனத்தில் பெரும்பகுதி ஊழியர்கள் இந்தியர்கள் என்பதால், இதனால் இந்திய ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
பணி நீக்கம் இல்லை
காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் ஹம்பிரிஸ், எங்களது நிறுவனத்தில் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது தவறு, மாறாக இன்னும் பல ஆயிரம் பேரை இந்தியாவில் வேலைக்கு எடுக்க உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல செய்தித் தாள்களில் அதிலும் தலைப்பு செய்தியாக இது வந்தது. ஆனால் நாங்கள் எங்கள் வளர்ச்சியை விரிவுபடுத்தி வருகிறோம், இதனால் நாங்கள் உண்மையில் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் எத்தனை பேர்
காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்கா என்றாலும், இங்கு சுமார் 2 லட்சம் ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். அதிலும் டி.சி.எஸ்க்கு அடுத்த இடத்தில் உள்ளது என்றும் பிரையன் கூறியுள்ளார். பணி நீக்கம் இல்லை என்ற கூறிய பிரையன், புதிய தொழில்நுட்பங்களை மையாகக் கொண்ட திறமைகளுக்கு இடமளிக்கும் வகையில், தொழிலாளர்கள் மாற்றியமைக்கப் படுவார்கள், மேலும் புதிய வேலைக்கு தேவையான நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், இணையம் மற்றும் அது சார்ந்த விஷயம் என இன்னும் பல விஷயங்களில் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாதிப்பு இருந்தது
காக்னிசண்ட் வளர்ச்சி கண்னோட்டத்தில் அதன் முழு திறனுக்கும் ஏற்ப செயல்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டவர், மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் சேர்ந்தலிருந்தே, இதில் அவர் கவனமாக இருந்து வருவதாகவும், மேலும் காக்னிசண்ட் விரைவில் அதன் வளர்ச்சியை விரைவு படுத்த முடியும் என்றும் கூறியவர், நாங்கள் வர்த்தக அடிப்படையில் மிகவும் வலுவாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எங்கள் திறனைத் தான் சரியாகக் செயல்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் நான் எனது நேரத்தை எங்களது கூட்டாளர்களுடன் செலவிடுகிறேன், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரம் செலுத்துவதோடு, எங்களது சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
நம்பிக்கையுடன் உள்ளோம்
நாங்கள் மிக உறுதியாக உள்ளோம், எங்களால் மிகு வளர்ச்சியை அடைய முடியும் என்றும் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பொருளாதாரத்தினை பற்றி பேசியவர், டிஜிட்டலுக்கான மாற்றம் மேலும் வளர்ச்சி வாய்ப்புகளை தரும் என்று நான் நினைக்கிறேன். ஆக இந்த நேரத்தில் நாங்கள் உண்மையில் வட அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் நாங்கள் முதலீடு செய்ய உள்ளோம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் நாங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications