ஒரே மாதத்தில் 14 லட்சம் வேலை வாய்ப்புகளா..? ஆதாரமாக எதைக் காட்டுகிறார்கள் தெரியுமா..?

புதுடெல்லி: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சமீபத்திய ஊதிய தரவுகளின் படி, ஜூலை மாதத்தில் சுமார் 14.24 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிற மத்திய அரசு. இது முந்தைய ஜூன் மாதத்தில் உருவாக்கிய 12.49 லட்சம் வேலை வாய்ப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-19 ஆம் ஆண்டில் ESIC-ல் புதிதாக பதிவு செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.49 கோடி பேர் என்று தேசிய புள்ளி விவர அலுவலகம் (NSO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு கடந்த 2017 செப்டம்பர் முதல் 2019 ஜூலை வரைக்குமான காலத்தில் சுமார் 2.83 கோடி பேர் புதிதாக இஎஸ்ஐசியில் சேர்ந்துள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.

ஒரே மாதத்தில் 14 லட்சம் வேலை வாய்ப்புகளா..? ஆதாரமாக எதைக் காட்டுகிறார்கள் தெரியுமா..?

ESIC, ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களில் பதிவு செய்து கொண்டவர்களின் தரவுகள் அடிப்படையில் தான் அடிப்படையில் இந்த NSO அறிக்கை விவரங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்த மூன்று அமைப்புகளின் ஊதிய தரவு அல்லது புதிய சந்தாதாரர்களின் தரவை கடந்த ஏப்ரல், 2018 முதல் வெளியிட்டு வருகிறது. ஆனால் செப்டம்பர் 2017 முதல் தரவுகள் விவரம்க்கள் இருக்கிறதாம். செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரை ESIC திட்டத்தில் மட்டும் 83.34 லட்சம் பேர் புதிதாக சேர்ந்து இருக்கிறார்களாம்.

அதே போல இந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 11.61 லட்சம் பேர் புதிதாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) திட்டங்களில் பதிவு செய்திருக்கிறார்களாம். இது கடந்த 2019 ஜூன் மாதத்தில் பதிவு செய்து கொண்ட 10.75 லட்சம் பேருடன் ஒப்பிடும் போது, சுமார் 8 % அதிகமாம்.

2018-19 ஆம் ஆண்டில், மொத்தம் 61.12 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ நடத்தும் பல சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்திருக்கிறார்களாம். அதே போல, நிகர செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரை 15.52 லட்சம் சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ திட்டங்களில் இணைந்து இருக்கிறார்களாம்.

அதுவே, கடந்த செப்டம்பர் 2017 முதல் ஜூலை 2019 வரைக்குமான காலத்தில் எத்தனை பேர் புதிதாக இபிஎஃப்ஓ திட்டங்களில் இணைந்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், சுமார் 2.65 கோடி பேர் சேர்ந்து இருக்கிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+