இந்தியாவின் பணக்கார பெண்கள் யார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு வருடமும் சீனாவில் ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் என்ற தலைப்பில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த வருடமும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

எப்போதும் போல் இந்த வருடமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய முறையும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த வருடம் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3,80,700 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டு உள்ளது.

முதல் இடம் யாருக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருந்தாலும், இந்த வருடம் பணக்கார பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகியுள்ளது என்ற சொல்ல வேண்டும்.

சரி அப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

பணக்கார பட்டியல்

பணக்கார பட்டியல்

2019 ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் பட்டியலில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தின் 831 விட 953 ஆக உயர்ந்துள்ளது. இதுவே அமெரிக்க டாலரின் மதிப்பில் பில்லியனர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் 141இல் இருந்து 138ஆக குறைந்துள்ளது.

இந்திய ஜிடிபி

இந்திய ஜிடிபி

இப்பட்டியலில் இருக்கும் டாப் 25 பேரின் சொத்து மதிப்பை சேர்த்தால் இந்தியாவின் 10 சதவீத ஜிடிபி, அதுவே பட்டியலில் இருக்கும் 953 பேரின் சொத்துக்களையும் கணக்கிட்டால் 27 சதவீத ஜிடிபி சமம்.

ஒரு ஆயிரம் பேரின் சொத்துக்கள் இந்தியாவின் 27 சதவீதம் ஜிடிபி என்பது மிகவும் வேதனை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

 

பெண்கள்

பெண்கள்

இப்பட்டியலில் சுமார் 152 பெண்கள் இந்த வருடம் இடம்பெற்று உள்ளனர்.

நாட்டின் முன்னணி டெக் நிறுவனங்களின் ஒன்றான் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், ஹெச்சிஎல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் சிஇஓவும் ஆன ரோஷினி நாடார் தான் ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் பட்டியலின் பணக்கார இந்திய பெண்.

ரோஷினி நாடார்-இன் மொத்த சொத்து மதிப்பு 36,800 கோடி ரூபாய்.

 

டாப் 3 இடங்கள்

டாப் 3 இடங்கள்

முதல் இடத்தை ரோஷினி நாடார் பெற்றுள்ள நிலையில், 2வது இடத்தை 31,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் காட்ரிஜ் குரூப் தலைவர் ஸ்மிதா வி கிரிஷ்னா பெற்றுள்ளார்.

இதைதொடர்ந்து பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரன் முசம்தார் ஷா 18500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hcl ஹெச்சிஎல்
English summary

HCL Corp's CEO Roshni Nadar richest Indian woman at ₹36,800 cr

HCL Corporation's 37-year-old CEO Roshni Nadar was named the richest woman in India with a net worth of ₹36,800 crore by IIFL Wealth Hurun India Rich List 2019 on Wednesday. She's followed by Godrej Group's heir Smita V Crishna with a net worth of ₹31,400 crore. Roshni's mother Kiran Nadar was ranked third-richest with a net worth of ₹25,100 crore.
Story first published: Thursday, September 26, 2019, 8:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X