இந்தியாவில் 6 ரன் வேக்களுடன் உலகின் 3-வது பெரிய விமான நிலையமா..? வாவ் டா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தான் இன்று வரை இருந்து வருகிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் மூன்று ஓடு தளங்கள் (ரன் வே) இருக்கின்றன.

ஆனால் இப்போது புதிதாக அறிவித்திருக்கும் ஜேவார் விமான நிலையத்தில் மொத்தம் ஆறு ஓடு தளங்கள் இருக்குமாம். எனவே இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் என்கிற பெயரை ஜேவார் விமான நிலையம் தட்டிச் செல்ல இருக்கிறது. இந்த ஜேவார் விமான நிலையம் கட்டி முடித்தபின் உலகின் மிகப் பெரிய விமான நிலையங்கள் பட்டியலிலும் அசால்டாக இடம் பிடிக்கப் போகிறதாம்.

இந்தியாவில் 6 ரன் வேக்களுடன் உலகின் 3-வது பெரிய விமான நிலையமா..? வாவ் டா..!

இன்றைய தேதிக்கு உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக 8 ஓடு தளங்களைக் கொண்ட சிகாகோ சர்வதேச விமான நிலையம் (O'Hare International Airport) தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையப் பட்டியலில், முதலிடத்தில் இருக்கிறது. இந்த விமான நிலையத்தை சுமாராக 7 ஆயிரத்து 200 ஏக்கர் நிலப் பரப்பில் அமைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Dallas/Fort Worth International Airport சர்வதேச விமான நிலையம் தான் ஏழு ஓடு தளங்களை கொண்ட, உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கிறது.

உலகின் 3-வது பெரிய விமான நிலையாமா ஜேவார் உடன் நான்கு விமான நிலையங்கள் பங்கு போட்டுக் கொள்ளப் போகிறார்களாம்.

1. Amsterdam Airport Schiphol, Netherland

2. Detroit, Metropolitan airport, America

3. Boston Logan internationl airport, America

4. Denver International Airport, America

ஆகிய 4 விமான நிலையங்களில் 6 ஓடு தளங்கள் இருக்கின்றனவாம். இப்போது இந்த பட்டியலில் இந்தியாவின் ஜேவார் விமான நிலையமும் இணையப் போகிறதாம்.

உபர் CEO அதிரடி பேச்சு..! பிரைவசி சட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு..!உபர் CEO அதிரடி பேச்சு..! பிரைவசி சட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிப்பு..!

ஜேவார் விமான நிலையத்தை அமைக்க சுமார் 5,000 ஹெக்டேர் நிலப் பரப்பை ஒதுக்கி இருக்கிறார்களாம். இந்த 5,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் தான் ஆறு ஓடு தளங்கள், விமான நிலையம் என அனைத்தும் வரப் போகிறதாம். இந்த ஜேவார் விமான நிலையம் வரும் 2022 - 23 நிதி ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jewar airport: Worlds third largest airport with 6 run ways taking place in india

The New Jewar airport is planned with six run ways. So it may be in the world largest airport list once its construction works completed.
Story first published: Thursday, September 26, 2019, 14:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X