மாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே!

டெல்லி : பிரபலமான ஸ்டார்டப் நிறுவனமான ஓயோ, தனது சேவைகளை அதிகரிக்க ஐ.ஐ.டி டெல்லி மற்றும் பிளாக்ஷா யுனிவர்சிட்டியுடன் கை கோர்த்துள்ளது.

எதற்காக என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனம் இந்த பல்கலைகழகங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த வீட்டி வசதி சேவையை வழங்கவே இந்த பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்துள்ளது.

மாணவர்களை கவர பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஓயோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒயோ நிறுவனம், மாணவர்களுக்கு சிறந்த வீட்டி வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த ஒப்பந்தம் என்றும், மேலும் இந்த வீடுகளின் வாடகை மாதம் குறைந்த பட்சம் 6,500 ரூபாயிலிருந்து, 12,999 ரூபாய் வரை உள்ளது என்றும் கூறியுள்ளது..

மேலும் இங்கு வைபை வசதி மற்றும் டெலிவிஷன், பிரிட்ஜ், ஏசி, முறையான ஹவுஸ்கீப்பிங் வசதி, இது தவிர பவர் பேக்கப், சிசிடிவி சர்வேலன்ஸ் மற்றும் என அனைத்தும் 24/7 சேவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆக லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுனர்கள், வேலை செய்பவர்கள் என அனைவரையும் குறி வைத்து இந்த வீடு வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது ஓயோ. மேலும் இது சிறந்த அனுபவத்தை கொடுகப்பதோடு, இது ஒரு உயர்தர அனுபவத்தை கொடுக்கும் என்றும், நாங்கள் நீண்டகால வாடகைக்கு வரவிருப்பவர்களை வரவேற்கிறோம் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2018ல் இந்த ஓயோ நிறுவனம் 500 கட்டிடங்களையும், இதனுடன் 30,000 பெட்களையும், இணைத்துள்ளது, இது தவிர தற்போது மாதம் 5000 புதிய பெட்களை இணைத்து வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் தற்போது ஒயோ லைஃப் நிறுவனம் 4 நகரங்களில் உள்ளது என்றும், இந்தியாவில் டெல்லி, என்.சி.ஆர். புனே, பெங்களுரு உள்ளிட்ட இடங்களிலும், ஹைதராபாத், சென்னை கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

அதிலும் மாணவர்களுக்கு கொடுக்க உள்ளதாக கூறும் இந்த வீடுகள், பல்கலைகழகங்களுக்கு அருகிலேயே இருக்கும் என்றும், இது தவிர மாணவர்களின் எதிபார்ப்புகளுக்கு ஏற்ப வைபை வசதி, சிறந்த உணவு, உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளும் செய்து தரப்படும் என்றும் ஓயோ கூறியுள்ளது.

மாணவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்று நாங்கள் இதில் உறுதியாக உள்ளோம், இதன் மூலம் வீட்டுத்துறையில் இன்னும் நல்ல வளர்ச்சியை காண்போம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நல்லது நடந்தால் நல்ல விஷயம் தானே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+