100 ரூபாய்க்கு புக் பண்ணது தப்பாய்யா... கேன்சல் செய்ததால்.. ரூ. 77,000 பணத்தை உருவிய கஸ்டமர்கேர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாட்னா : டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக அரசு சில பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில், ஒரு புறம் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பலன் அடைந்து வந்தாலும், மறுபுறம் சில பிரச்சனைகளும் இருந்து வருகின்றன.

ஒரு புறம் மக்கள் இதற்காக அலைய வேண்டியதில்லை, அதோடு இருந்த இடத்தில் இருந்தே பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்றாலும், மறுபுறம் இதனால் சில பிரச்சனைகளும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனால் சிலர் லட்சக் கணக்கில் தங்களது பணத்தினையும் இழந்து வருகின்றனர். அதற்கு உதாரணம் தான் கீழே கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு.

சோமேட்டோவில் உணவு

சோமேட்டோவில் உணவு

பாட்னாவைச் சேர்ந்த பொறியாளரான விஷ்ணு, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு உணவு டெலிவரி ஆப்பான சோமேட்டோ மூலம் 100 ரூபாய்க்கு உணவினை ஆர்டர் செய்துள்ளார். இதற்கான பணத்தினையும் பேடிஎம் ஆஃப் மூலமே செலுத்தியுள்ளார். எனினும் உணவின் தரம் சரியில்லாமல் போகவே உணவினை திரும்ப கொடுப்பதாகவும், தனது பணத்தினை திரும்ப செலுத்தும் படியும், சோமேட்டோ கஸ்டமர் கேரினை அணுகியுள்ளார்.

லிங்கினை கிளிக் செய்யுங்கள்

லிங்கினை கிளிக் செய்யுங்கள்

போனை எடுக்காத சோமேட்டோ கஸ்டமர் கேர், திரும்ப சிறிது நேரத்திலேயே கால் செய்துள்ளனர். மேலும் உங்களது பணத்தை திரும்ப கொடுத்து விடுகிறோம், இதற்காக நீங்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இது உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதற்காக உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

பணம் ரூ.77,000 போச்சே

பணம் ரூ.77,000 போச்சே

இதை உண்மை என நம்பிய விஷ்ணு தனது பணம் தனக்கு திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், சோமேட்டோவின் கஸ்டமர் கேர் அனுப்பிய லிங்கினை கிளிக் செய்ததையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 77,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதிலும் பல்வேறு பேடிஎம் கணக்கிலிருந்து, இந்த பணத்தினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே விஷ்ணு காவல் துறையினரை அணுகியுள்ளார்.

அதிகரித்து வரும் பிரச்சனை

அதிகரித்து வரும் பிரச்சனை

நாளுக்கு நாள் ஒரு புறம் டிஜிட்டல் பேமென்ட் முறைகள் அதிகரித்து வந்தாலும், பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும் இது பேடிஎம் போன்ற இ-வாலட்கள் மூலம், பணம் திருடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த மாதம் லக்னோவைச் சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல், பேடிஎம் டிஜிட்டல் வாலட் மூலம் 35,000 ரூபாயை ஒரு வருடத்தில் சிறிது சிறிதாக திருடியுள்ளான். https://tamil.goodreturns.in/news/2019/09/06/a-small-guy-created-paytm-account-and-he-steals-rs-35-000-in-his-father-bank-account-015942.html, இதில் வேடிக்கை என்னவெனில் அந்த சிறுவனின் தந்தை யாரோ ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்துள்ளனர் என்றும், சைபர் க்ரைமை நாடியிருந்தார், பின்னர் தான் தெரிந்தது திருடன் வெளியில் இல்லை வீட்டில் தான் என்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Patna man loses Rs.77,000 after he seeks Rs.100 refund from Zomato

Patna engineer loses Rs.77,000 after he seeks Rs.100 refund from Zomato
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X