இரண்டாவது சுற்று விலைக் குறைப்பில் இறங்கி இருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி. நம் மாருதி சுசூகி நிறுவனம், இன்று தனது பிரபலமான பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலையில் பெரிய குறைப்பைச் செய்து அதை முறையாக அறிவித்துள்ளது. புதிய விலை குறைப்புக்குப் பின், பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலை இப்போது சுமாராக 1 லட்சம் ரூபாய் வரை குறைந்து இருக்கிறதாம். இந்த விலை குறைப்புக்கு முன் பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலை சுமார் 8.5 - 8.9 லட்சம் ரூபாயாம். இப்போது இந்த 1 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலை குறைப்பால் இனி 7.5 - 7.9 லட்சம் ரூபாய்க்கு இந்த கார்கள் விற்பனையாகும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களின் விலையை கடந்த செப்டம்பர் 25, 2019 அன்று 5,000 ரூபாய் வரை குறைத்தோம். மேலே சொன்ன விலை குறைப்புகளுடன், தற்போது பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை 1,00,000 ரூபாய் வரை குறைத்து இருக்கிறோம் என மாருதி சுசூகி நிறுவனமே மும்பை பங்குச் சந்தைக்கு எழுத்து மூலம் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 25, 2019 புதன்கிழமை அன்று, இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி, தன் என்ட்ரி ரக கார்கள் மற்றும் டீசல் ரக கார்களின் விலையை 5,000 ரூபாய் வரை குறைத்தார்கள். இந்த பட்டியலில் ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசைர் டீசல், டூர் எஸ் டீசல், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் போன்ற சிறப்பாக விற்பனையாகும் கார்கள் உள்ளன.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே, மாருதி சுசூகியின் விலை குறைப்பால், ஆட்டோமொபைல் சந்தையில், கார் வாடிக்கையாளர்களின் சென்டிமென்ட் பாசிட்டிவ்வாக மாறும். அதனால் ஆட்டோமொபைல் துறையில் நுகர்வும் அதிகரிக்கும் என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் நிறுவன வரி விகிதங்களை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்தார். மாருதி நிறுவனம் தனக்கு கிடைத்த வரிச் சலுகையை, அப்படியே மக்களுக்கு கடத்தத் தொடங்கி இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications