ஆன்லைன் சில்லறை விற்பனை ஜாம்பவானான அமேசான் திருவிழா பருவத்தை ஒட்டி பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும், வரும் செப்டம்பர் 29ம் தேதி வரை கொடுக்க உள்ளது.
இதில் இன்னொரு சிறப்பு சலுகை என்னவெனில், அதன் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த சலுகைகள் இன்றிலிருந்தே கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த பிரைம் உறுப்பினர்கள், கிட்டதட்ட 2,500 மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை சலுகையை, இன்றிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை முதல் இந்த ஆறு நாட்கள் இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
இன்று பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பிக்க உள்ள இந்த சிறப்பு சலுகையானது அக்டோபர் 4 வரை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதிரடியான தள்ளுபடி
அமேசான் வாடிக்கையாளர்கள், இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஷேல் 2019 விற்பனையில், மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பில் உள்ள ஸ்மார்ட்போன்கள் 40 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், குறிப்பாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் எக்ஸார் தொடக்க விலை 39,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்க உள்ளதாகவும், இதே கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 7டி, ஆரம்ப விலை 37,999 ரூபாயாகவும், ஒன்பிளஸ் 7டி புரோ 4000 தள்ளுபடி செய்யப்பட்டு 44,999 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், இதே ஒன்பிளஸ் 7, ரூ.29,999 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
புது ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
இதே இந்த விழாக்கால விற்பனையில் அமேசான் 15 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளதாகவும், குறிப்பாக சாம்சங் எம்30, இதன் விலை 11,999 ரூபாயும், விவோ யு10, ஓப்போ கே3, 15,990 ரூபாய்க்கும், இதே விவோ வி15 15,990 ரூபாய்க்கும், ஜியோமி எம்.ஐ ஏ3 12.999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், குறிப்பாக இந்த நடுத்தர போன்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே குறைந்த விலை ஸ்மார்போன்களுக்கும் சலுகை தரப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ரெட்மி7ஏ ரூ.4,999 என்றும், சாம்சங் காலக்ஸி எம்10 7,999 என்றும், இதே ரெட்மி ஒய்3 ரூ.7,999, சாம்சங் காலக்ஸி எம் 20, 9,999 ரூபாய்க்கும், இதே ரியல் மி யு1 7,999 கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
உதிரி பாகங்கள் விற்பனை
இ- காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது. அதன் உதிரி பாகங்கள் கூட சலுகை விலையில் கிடைக்கும். குறிப்பாக போன் கவர்கள், டெம்பர் கார்டு, சார்ஜர்கள் உள்ளிட்ட சில பாகங்கள் வெறும் 99 ரூபாய் இருந்து ஆரம்பிக்கிறது என்றும், குறிப்பாக ஹெட்போன்கள் பிட்னஸ் டிராக்கர்கள் 349 ரூபாய்க்கும், 799 ரூபாய் வரைக்கும் கிடைக்கும் என்றும், இது தவிர இன்னும் பற்பல சலுகையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேறு என்ன சலுகை
மேற்குறிப்பிட்ட சலுகைகள் தவிர வாடிக்கையாளர்கள் எஸ்பியை டெபிட் கார்டு அன்ட் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியும், இது தவிர பஜாஜ் ஃபைனான்ஸ் நோ காஸ்ட் இ.எம்.ஐ சலுகையையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சராசரி வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் தான் சலுகை என்றால், பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்று முதலே இந்த சலுகை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications