டெல்லி : முன்னதாக பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்து இரண்டு பொருளாதார ஆலோசகர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அலை ஓய்வதற்கு முன்பே, தற்போது வருமான வரித்துறையில் உள்ள முக்கிய 15 அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற சிபிஐ வழக்குகள் போடப்பட்டிருந்த 15 மூத்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு அரசாங்கம் கட்டாயமாக ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
குறிப்பாக மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள் (சிபிடிடி), முதன்மை ஆணையர், கூடுதல் ஆணையர், ஜாயின்ட் கமிஷ்னர், உள்ளிட்ட இன்னும் பலர் இந்த லிஸ்டில் உள்ளதாகவும், இவர்கள் விருப்ப ஓய்வு பெற கூறப்பட்டுள்ளதாகவும், இது 56 (J) என்ற அடிப்படை விதிகள் மூலம் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எத்தனை பேர் பணி நீக்கம்
கடந்த ஜூன் மாதம் முதல் கொண்டே, ஊழல் வரி அதிகாரிகளை அரசு பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இது நான்காவது முறையாக தற்போது பல அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த மூன்று பணி நீக்க திட்டங்களிலும் 49 உயர் அதிகாரிகளும், இதில் வருமான வரி துறையை சேர்ந்த 12 உயர் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த பணி நீக்கம்
இந்த பணி நீக்கத்திற்கு முக்கிய காரணம் வரி நிர்வாகத்தில் சில கறுப்பு ஆடுகள் தங்கள் அதிகாரங்களைக் தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரி செலுத்துவோரை துன்புறுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர நேர்மையான முறையில் வரி செலுத்துவோரின் மீது நடவடிக்கை எடுத்தல், சிறிய நடைமுறை மீறல்கள், அதிகப்படியான லஞ்சம் வாங்கினவர்கள், வரி செலுத்துவோரிடம் மிரட்டி பணம் வாங்கியவர்காள், மற்றும் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என ஒரு லிஸ்டாக தரம் பிரிக்கப்பட்டு, பலரை வேலையை விட்டு நீக்கியதோடு, வீட்டுக்கு வழியனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.
அதிரடி நடவடிக்கை
இது குறித்து மூத்த அதிகாரிகள் தரப்பில், கணிசமான எண்ணிக்கையிலான, வருமான வரி அதிகாரிகளை கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கான தைரியமான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம். மேலும் இந்த வகையான மோசமான நடவடிக்கையினை நாங்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு கட்டாய ஓய்வு பெற்ற அதிகாரிகளில் கிட்டதட்ட பாதிபேர் சட்ட விரோதமாக செயல்பட்டதாகவும், அதிலும் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சொத்து ஆதாரம்
இவ்வாறு வாங்கப்பட்ட லஞ்சத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், வாங்கப்பட்ட லஞ்சத்திற்கும் ஏற்றவாறு சொத்து சேர்த்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாராம். குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் ஊழல், வசூல் மற்றும் லஞ்சம், கிரிமினல் சதி, ஜிஎஸ்டி, இறக்குமதி வரி உள்ளிட்ட பல வற்றில் ஊழல் செய்த அதிகாரிகளை, அதுவும் 15 கமிஷனர் லெவல் அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பியது மத்திய அரசு.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications