மும்பை: பயோ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும், அதோடு மற்றொரு பக்கம் அந்நிய செலாவணியையும் பெரிய அளவில் மிச்சம் பிடிக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இதை எல்லாம் விட மிக முக்கியமாக மோடியின் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை இந்தியா அடைய முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.
எத்தனால் (ethanol) மற்றும் பியூட்டானோல் (butanol) போன்ற பயோ எரிபொருட்களை ஊக்குவிக்க தனது அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தி, வாகனங்களை வழக்கம் போல இயக்க முடியும். இந்த பயோ எரிபொருட்களை பல்வேறு உலக நாடுகளும் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அதோடு வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவும் கணிசமாக குறையும் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே சுமார் 7 லட்சம் கோடி ரூபாயைச் செலவிடுகிறது. இந்த சூழ்நிலையில் கார்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய எத்தனால் மற்றும் பியூட்டானோல் போன்ற மாற்று பயோ எரிபொருட்கள் பயன்படுத்தினால் நல்லது தானே. நாம் ஏன் அந்த மாற்று பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தக் கூடாது..? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்தனைக்கும் இந்த பயோ எரிபொருட்கள் வழக்கமான பெட்ரோல், டீசலை விட விலை குறைவானது என்றும் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.
இந்தியாவின் விமானத் துறை மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஏர் டர்பைன் எரிபொருளை ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்கிறார்கள். இந்த துறை, பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது இந்தியாவில் சுமார் 40,000 கோடி ரூபாய் சந்தையை உள்நாட்டில் திறந்து விடும் எனச் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே விமானங்களில் பயோ எரிபொருட்களை, பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் விமானங்களில் இந்த பயோ எரிபொருட்களை பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இந்தியாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு ஏராளமான அந்நிய செலாவணி மிச்சமாகும் எனச் சொல்லி இருக்கிறார்.
அதோடு இந்தியாவில் நிலக்கரிக்கு பதிலாக நாபியர் புற்களை (Napier Grass) பயன்படுத்தவும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம். பொதுவாக நிலக்கரியை விட நாபியர் புற்கள் அதிக வெப்பம் உமிழும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் செய்தாலே, வரும் 2025-ம் ஆண்டுக்குள், நாம் எளிதில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற பிரம்மாண்ட் இலக்கை அடைந்து விட முடியும் எனச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications