சு.சுவாமி அதிரடி! மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை! கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல் அணு குண்டுகளைப் போடுவதில் சூப்பர் ஸ்டாரான சுப்ரமணியன் சுவாமி, தற்போது மீண்டும் ஒரு பெரிய அணு குண்டைப் போட்டு இருக்கிறார்.

மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்பட்ட, மோடி அரசுக்கு பொருளாதாரம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என ஒரே அடியில் தன் கட்சி ஆட்களையே கவிழ்த்து இருக்கிறார்.

சுப்ரமணியன் சுவாமி தற்போது பாஜக கட்சியில் ஒரு ராஜ்ய சபா உறுப்பினராக பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து பத்துக்களை எல்லாம் விற்று, கடனை அடைக்கிறேன்..! அனில் அம்பானியின் பரிதாப நிலை..!சொத்து பத்துக்களை எல்லாம் விற்று, கடனை அடைக்கிறேன்..! அனில் அம்பானியின் பரிதாப நிலை..!

டிவி பேட்டி

டிவி பேட்டி

இவர் இன்று மதியம் டைம்ஸ் நவ் டிவி-க்கு கொடுத்த பேட்டியில் மேலே சொன்ன கருத்துக்களைச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியையே கடுப்பேற்றி இருக்கிறார். பொருளாதாரம் தெரியவில்லை என யாரை எல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள் என டிவி சேனலின் நெறியாளர் கேட்க "அரவிந்த் சுப்ரமணியம், ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி என யாருக்குமே பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியவில்லை" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

அத்தோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சமீபத்தில் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தனியாக கட்டம் போட்டு திட்டித் தீர்த்து இருக்கிறார் நம் சுப்ரமணியன் சுவாமி. "மோடி அரசின் 1.0-வில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு பொருளாதாரத்தின் ஏ பி சி டி (அடிப்படை) கூட தெரியாது. இந்த சிக்கல் இப்போதும் நம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது" என தன் கட்சிக் காரர்களையே, போட்டு பிளந்து எடுத்து இருக்கிறார் சுப்ரமணியம் சுவாமி.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

சரி இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் என்ன பிரச்னையைப் பார்க்கிறீர்கள்..? எனக் கேட்க "அவர் நிதி அமைச்சர் பதவிக்கு வந்து கொஞ்ச காலம் தான் ஆகிறது. அவரின் நடவடிக்கைகள் எதுவும் இந்திய பொருளாதாரத்தின் மேக்ரோ பிரச்னைகளை சரி செய்யும் விதத்திலான நடவடிக்கைகளாக இல்லை" என க்ளீன் போல்டாக்கி இருக்கிறார் நம் சுப்ரமணியன் சுவாமி.

பயன் இல்லை

பயன் இல்லை

மேலும் "திடீரென்று 1.4 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் வரிச் சலுகை வழியாக துடைத்து எறிந்து இருக்கிறார். இது எந்த ஒரு திட்டத்திலும் சொல்லப் படாத நடவடிக்கை" என நிர்மலா சீதாராமனை தனியாக வறுத்து எடுத்து இருக்கிறார் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இந்தியப் பொருளாதாரத்தின் மேக்ரோ பொருளாதார பிரச்னைகளை தீர்க்க பயன்படாது எனச் சொல்லி இருக்கிறார்.

விளக்கம்

விளக்கம்

சரி இப்போது என்ன தான் பிரச்னை எனக் கேட்டால் "இந்தியப் பொருளாதாரத்தில் தேவை மிகக் குறைவாக இருக்கிறது, இந்த நேரத்தில் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இப்படி ஒரு பெரிய வரிச் சலுகையைக் கொடுத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து சப்ளையைத் தான் மேலும் அதிகப்படுத்துவார்கள். ஆக தேவை அதிகரிக்கவில்லை தானே..?" என மீண்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

தீர்வு என்ன

தீர்வு என்ன

"உண்மையாகவே மோடி அரசுக்கு இந்திய பொருளாதாரத்தில் தேவையை அதிகப்படுத்த நினைத்து இருந்தால், அவர்கள் வருமான வரியைத் தான் முழுமையாக ஒழித்து இருக்க வேண்டும். அது தான் இந்திய பொருளாதாரத்தின் தேவையை அதிகப்படுத்தி இருக்கும், அதிகப்படுத்த உதவும்" என ஒட்டு மொத்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி, தலைவர்கள் வரை அனைவருக்கும் ஆப்படித்து இருக்கிறார் நம் சுப்ரமணியன் சுவாமி. அனேகமாக ஒட்டு மொத்த பாஜகவும் சு.சுவாமியின் பேச்சுக்கு எப்படி பதில் கொடுப்பது என ஆடிப் போய் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subramanian Swamy: Modi government do not know economics No use of corporate tax reduction

BJP Rajya sabha member Subramanian Swamy said that the modi Govt does not know anything about economics and there is no use of corporate tax reduction.
Story first published: Saturday, September 28, 2019, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X