ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 ஊக்கத் தொகையா..?

ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம்: சமீபத்தில் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில், தெலுகு தேசம் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது YSR காங்கிரஸ் கட்சி. YSR காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்.

தேர்தல் பணியின் போதே, இரண்டு பெரிய கட்சிகளும், கன்னாபின்னா என பல சலுகைகள், ஊக்கத் தொகைகள், புதிய திட்டங்கள் என பலவற்றை அறிவித்து இருந்தார்கள். YSR காங்கிரஸ் பொறுப்புக்கு வந்த பின், அதில் சில திட்டங்களை உடனடியாக அமல்படுத்தியும் காட்டினார்கள். உதாரணமாக 'Rythu Bharosa' என்கிற பெயரில், ஆந்திர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 12,500 ரூபாய் கொடுக்கும் உள்ளீட்டு மானிய திட்டத்தை சமீபத்தில் தான் அமல்படுத்தினார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 ஊக்கத் தொகையா..?

இப்போது இன்னொரு அதிரடித் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது ஆந்திராவின் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு. அது தான் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம். இந்த திட்டத்தின் பெயர் 'YSR வாகன மித்ரா'. இந்த திட்டத்தின் படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள, ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டாக்ஸி ஓட்டுருக்கும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் ஊக்கத் தொகையாகக் கொடுக்கப்படுமாம்.

ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை சுய தொழில் போலச் செய்து வரும் ஓட்டுநர்களுக்கு இந்த உதவித் தொகை பெரிய உதவியாக இருக்கும் என்கிறார்கள். இந்த திட்டம் முறையாக வரும் அக்டோபர் 04, 2019 அன்று அதிகாரபூர்வமாக தொடங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஆந்திரப் பிரதேச அரசு தரப்பினர்கள். இந்த திட்டத்தின் படி, ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் 10,000 ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு வாகனங்களை ரிப்பேர் செய்வது, வாகனங்களுக்கான ஃபிட்னஸ் பிரச்னைகளைச் சரி செய்வது, இன்சூரன்ஸ் செலவுகளை சமாளிப்பது போன்றவைகளைச் செய்து கொள்ளத் தான் கொடுக்கிறார்களாம்.

ஏற்கனவே YSR வாகன மித்ரா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இந்த திட்டத்தில் சேரத் தகுதியானவர்களையும் வரும் 30 செப்டம்பர் 2019-க்கு நிறைவடையுமாம். இதுவரை ஆந்திர மாநிலத்தில் மொத்தல் 1.75 லட்சம் பேர் இந்த திட்டத்தின் வழியாக ஊக்கத் தொகை பெற விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அதில் 93,000 பேர் சரி பார்க்கப்பட்டு இருக்கிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+